கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி
கேரளா மாநிலத்தில் சக்கர உப்பேறி மிகவுல் பிரபலம். இன்று இந்த சக்கர உப்பேறியை வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நேந்திரங்காய் – 3,
வெல்லம் பொடித்தது – 2 கப்,
சுக்குப்பொடி – அரை டீஸ்பூன்,
ஏலக்காய்ப்பொடி – அரை டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு,
நெய் – கால் கப்.
செய்முறை :
நேந்திரங்காய்களை நீளவாக்கில் சற்று கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, நறுக்கிய துண்டுகளை பொரித்தெடுங்கள்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, கெட்டிப் பாகு ஆனதும் (பாகு பூத்து வரும்போது), பொரித்து வைத்த நேந்திரங்காய் துண்டுகள், ஏலக்காய்க்காய், சுக்குதூள், நெய் ஆகியவற்றை பாகில் கொட்டி, நன்கு கிளறி இறக்குங்கள்.
வத்தல் உதிர், உதிராக வந்துவிடும். (நேந்திரங்காயை வேகவைத்தும் இதை செய்வார்கள். இதன் செய்முறை கேரளாவில் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது).
சூப்பரான கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி ரெடி.