கோடையில் குளுகுளு மாம்பழ பிர்ணி
கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு குளுகுளு மாம்பழ பிர்ணி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காய்ச்சாத பால் – ஒரு லிட்டர்,
பச்சரிசி – கைப்பிடியளவு,
சர்க்கரை – அரை கப்,
மாம்பழக் கூழ் – ஒரு கப்,
தோல் சீவி, பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் – சிறிதளவு,
உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி, நெய் – தேவையான அளவு.
செய்முறை :
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நைசாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வறுத்தெடுக்கவும்.
அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி தீயை மிதமாக வைத்து நடு நடுவே கிளறி காய்ச்சவும்.
பால் பாதியாக சுண்டிய பிறகு அரைத்த அரிசி விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
அரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரைந்ததும் கிளறி இறக்கவும்.
ஆறியதும் மாம்பழக்கூழ், மாம்பழத் துண்டுகள் சேர்த்து கலக்கவும்.
மேலே பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து அலங்கரிக்கவும்.
இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்த பிறகு பரிமாறவும்.
சூப்பரான மாம்பழ பிர்ணி ரெடி.