நடந்தாலே கால் ரொம்ப வலிக்குதா? என்ன காரணமாக இருக்கும்?
நின்றுகொண்டிருந்தாலும் சரி, உட்கார்ந்தே இருந்தாலும் அல்லது அதிகமாக நடந்தாலோ கால் வலி உண்டாகும். சிலரோ எதற்கெடுத்தாலும் கால் வலிக்கிறது என்று சொல்லக் கேட்டிருப்போம். இப்படி அடிக்கடி கால்வலி வருவதற்கு காரணம் தான் என்ன?
ஏன் அடிக்கடி கால்வலி உண்டாகிறது என்று தெரிந்துகொண்டாலே அதை எப்படி ஈஸியாக சரிசெய்ய முடியும் என்ற பதில் நமக்குக் கிடைக்கும்.
பொதுவாக இடுப்பிலிருந்து பாதம் வரைக்கும் எந்த பகுதியில் வலி ஏற்பட்டாலும் அதை நாம் கால்வலி என்றுதான் சொல்கிறோம்.
ஆனால் இடுப்பு, பாதம், தொடை, கால் மடிப்புகள், கணுக்கால் ஒவ்வொன்றில் ஏற்படும் வலியும் வேறுபட்டது.
பாதங்களிலோ அல்லது மூட்டுகளிலோ உண்டாகிற வலிக்கு எழும்புத் தேய்மானம் போன்ற பல காரணங்கள் உண்டு. ஆனால் தொடை மற்றும் கணுக்கால் ஆகிய எலும்பு இல்லாத பகுதிகளில் ஏன் வலி உண்டாகிறது என்று தெரியுமா?
பொதுவாக, வலிகளிலேயே பல வகையுண்டு. கூறாக ஊசிபோல் குத்தும் வலி, மந்தமாக வலிக்கும் வலி, மரத்துப்போதல், எரிச்சலோடு கூடிய வலி, குறுகுறுவென உறுத்திக்கொண்டே இருப்பது இப்படி பல வகையுண்டு.
இந்த அத்தனை வகை வலிக்கும் நரம்புகள் தான் மூலக்காரணம். நரம்புகளில் உண்டாகும் அதிக அழுத்தம், அதிக அல்லது குறைந்த வெப்பநிலை, நரம்பு திசுக்கள் பாதிப்படைதல் போன்ற பல்வேறு காரணங்களால் வலி ஏற்படலாம்.
ஆடுதசையில் உண்டாகும் பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் உண்டாகிறது. இது பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு உண்டாகக்கூடியதாக இருக்கிறது.
அதிக அளவிலாக உடற்பயிற்சி செய்பவர்கள், கல்லீரல் பாதிப்பு உடையவர்கள், அதிக வயிற்றுப்போக்கு உண்டாதல், உடல்லி தாது உப்புகள் முறையாக இல்லாதது, தைராய்டு குறைபாடு, சதைகளில் உண்டாகும் சோர்வு, கருத்தடை மாத்திரை பயன்படுத்துதல் போன்ற பல காரணங்களால் நரம்புகளில் பிரச்னை உண்டாகி, அழுத்தம் அதிகமாகின்றன.
இதனால் தசைநார்களில் தாங்க முடியாத வலிகள் உண்டாகின்றன.
இவற்றிற்கு முறையான தீர்வே ஆரோக்கியமான உணவுகள் தான்