குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு ஸ்டஃப்டு பரோட்டா
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – ஒரு கப்,
உருளைக்கிழங்கு – 2,
வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – ஒன்று,
புதினா இலைகள் – சிறிதளவு,
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ப.மிளகாய், புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்றாக பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதுவே ஸ்டப்பிங்.
மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டையையும் கிண்ணம் போல செய்து, அதன் நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டப்பிங் வைத்து, நன்றாக இழுத்து மூடவும்.
இந்த மாவை சற்று கனமான பராத்தாக்களாக தேய்க்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்த பராத்தாக்களை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.