குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி
குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மாம்பழத்தை வைத்து குல்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குங்குமப்பூ – சிறிய சிட்டிகை
சோளமாவு – சிறிதளவு
ஏலக்காய் துள் – சிறிய சிட்டிகை
பால்கோவா – 1/4 கப்
சர்க்கரை – 150 கிராம்
துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி – 1/2 கப்
பால்- 1 லிட்டர்
மில்க் மைட் – 100 மில்லி
மாம்பழ விழுது – 1 கப்
மாம்பழ துண்டுகள் – 1 கப்
செய்முறை :
சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். பால் பாதியாக சுண்டியதும் சக்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து இதனுடன் மில்க் மைட் மற்றும் பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு கொதித்து ஒரு பதத்திற்கு வந்ததும் மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து காய்ச்சவும்.
பின் அதில் துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூ சேர்க்கவும். சிறிது நேரத்துக்கு பிறகு பேஸ்ட் போன்ற பதத்திற்கு வருவதற்கு சிறிதளவு கரைத்த சோளமாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
இறுதியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து இறக்கவும்.
இது சற்று ஆறிய பிறகு குல்ஃபி கோப்பைகளில் ஊற்றி 8 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
குளுகுளு மாம்பழ குல்ஃபி தயார்.