சமையல் குறிப்புகள்புதியவை

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ஃப்ரூட் டிக்கா

பழங்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு ஃப்ரூட் டிக்கா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஃப்ரூட் டிக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முலாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,
தர்பூசணித் துண்டுகள் – ஒரு கப்,
கிவித் துண்டுகள் – ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன்,
தேன் – தேவையான அளவு,
டிக்கா குச்சிகள் – தேவையான அளவு.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் முலாம்பழத் துண்டுகளுடன், தர்பூசணித் துண்டுகள், கிவித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து கலக்கவும்.

டிக்கா குச்சியில் முதலில் முலாம்பழத் துண்டை குத்தவும். அதன் மீது தர்பூசணித் துண்டு, கிவித்துண்டு என மாற்றி மாற்றி குத்தி பரிமாறவும்.

பலன்கள்: தாகத்தை தணிக்கும். பழங்கள் சாப்பிட அடம் பிடிக்கும் குட்டீஸ்களை சுலபமாக சாப்பிட வைத்து விடலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker