வெயிலில் இந்த தவறுகள் உங்களை அழகு இழக்கச் செய்யும்.. இனியும் செய்யாதீங்க
கடுமையான வெயில் மற்றும் வெப்பம் சருமத்தை சேதப்படுத்தும். உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், சருமத்தை சூழலில் இருந்து பாதுகாப்பது அவசியம். தீங்கு விளைவிக்கும் சில தவறான முறைகளை சருமத்தை சரிப்படுத்த முடியாத அளவு தீங்கு விளைவிக்கும்.
பலர் சருமத்தை மேம்படுத்த சரும பராமரிப்பு தொடர்பான அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் சில தவறுகளால், கடின உழைப்பு அனைத்து வீணாகி விடுகிறது.
அதே போன்று கோடை காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்பினால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
தழும்புகள், பருக்கள் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளால் உங்களின் இயற்கை அழகு பழாகி விடலாம். அதனால் சில தவறுகளை தவிர்க்க வேண்டும்.
அப்படியாயின், கோடைக்கால வெயிலில் இருந்து சருமத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. கோடைக் காலத்தில் அளவுக்கு அதிகமாக மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் இது சரும பாதிப்பை ஏற்படுத்தும். சருமத்தில் இயற்கையாக உள்ள ஆக்ஸிஜன் தோல் துளைகளில் வியர்வையை உண்டு பண்ணும். எனவே கோடைக்காலம் வந்து விட்டால் மேக்கப் போடுவதற்கு முன்னர் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம்.
2. சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க நினைப்பவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். ஏனெனின் அதிகப்படியான சூரிய ஒளி தோல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். தோல் மருத்துவர்கள் ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார்கள்.
3. குளிர்காலம் போன்று கோடைக்காலத்திலும் சருமத்தில் போதுமான அளவு நீரேற்றம் அவசியம். மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதை தவிர்த்தால் சருமத்தில் வறட்சி இருக்கும். அதனால் லேசான மாய்ஸ்சரைசர் அல்லது ஜெல் சார்ந்த மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும்.
4. ஆண்களை விட பெண்கள் அடிக்கடி முகத்தை கழுவுவார்கள். மாறாக அடிக்கடி முகத்தை சுத்தம் செய்தால் முகம் இயற்கையாகவே ஈரப்பதத்துடன் காணப்படும்.சருமத்தில் வறட்சி இருந்தால் வயதான தோற்றம் துவங்கி விடும். ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை 2 முறையாவது சுத்தம் செய்வது அவசியம்.
5. ஆரோக்கியமான சருமத்திற்கு சரும பராமரிப்பு அவசியம். கோடைக்காலங்களில் இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் இரவில் சருமப் பராமரிப்பு செய்ய வேண்டும். அதே போன்று சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டும்.
6. கோடையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது தண்ணீர் தான். பருவக்கால பழங்கள் சாப்பிடலாம் மற்றும் ஒரு நாளைக்கு தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் உள்ளிட்ட செயன்முறைகள் முகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.