ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைவீடு-தோட்டம்

மாடித்தோட்டத்தில் டிராகன் பழச்செடி வளர்க்க முடியுமா?

தற்போது இருக்கும் நவீன மாற்றத்தினால் மாடித் தோட்டத்தில் வைத்து தான் காய்கறிகள் மற்றும் பழங்களை வளர்க்கிறார்கள்.

ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றால் எந்தவித ரசாயனங்களும் இல்லாமல் தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.

அப்படியாயின், செடியில் வளரக் கூடிய டிராகன் பழங்களின் நிறம், குணம் மற்றும் அதில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய தரும் நன்மைகள் மனித உடலுக்கு பலனளிக்கிறது. இதனை வீட்டு தோட்டத்தில் வைத்து வளர்க்கலாம்.

சந்தையின் இந்த பழங்கள் விலை கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் வீட்டில் வைத்து வளர்க்கும் பொழுது அதன் சுவை மற்றும் மணம் நன்றாக இருக்கும்.

அந்த வகையில், டிராகன் செடியை வீட்டு மாடியில் வைத்து வளர்ப்பது எப்படி? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Gardening tips: மாடித்தோட்டத்தில் டிராகன் பழச்செடி வளர்க்க முடியுமா? | Gardening Tips Can You Grow Dragon Fruit

விதைகள் அல்லது செடி

டிராகன் பழங்களின் விதைகளை விதைத்து பழம் கொடுக்க குறைந்தது 4 ஆண்டுகள் வரை ஆகும், ஆனால் ஓரிரு ஆண்டுகளில் பழங்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

வளர்ப்பதற்கு சரியான நேரம்

டிராகன் பழங்களை வளர்க்க நினைப்பவர்கள் இதமான வெப்பநிலை இருக்கும் காலத்தில் வளர்க்கலாம். அல்லது இலையுதிர் காலம், கோடைக்கால துவக்கத்தில் வளர்க்கலாம். மார்ச் முதல் ஏப்ரல் வரையில் உள்ள காலப்பகுதியில் இந்த செடி நன்றாக வளரும். 4 முதல் 6 மணி நேர சூரிய வெளிச்சம் அவசியம் தேவைப்படும்.

Gardening tips: மாடித்தோட்டத்தில் டிராகன் பழச்செடி வளர்க்க முடியுமா? | Gardening Tips Can You Grow Dragon Fruit

தொட்டி தேர்வு

டிராகன் செடி வளர்க்க நினைப்பவர்கள் சிறிய செடிக்கு கூட பெரிய தொட்டி தேவை. 15 இன்ச் விட்டம் கொண்ட தொட்டியில் நன்றாக வளரும். ஏனெனின் டிராகன் செடியிலுள்ள வேர்கள் சற்று ஆழமான சென்று வளரக்கூடியது.

டிராகள் செடிகள் வளர ஏற்ற மண் கலவை அவசியம். மண், மணல், உரம் மற்றும் தேங்காய் நார் கலந்த கலவையாக இருந்தால் டிராகன் பழங்கள் நன்றாக இருக்கும். அதில், 40 சதவீதம் தோட்ட மண், 10 சதவீதம் மணல் அல்லது உறிஞ்சும் தன்மை கொண்ட உட்பொருள், 30 சதவீதம் ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க தேங்காய் நார் மற்றும் 20 சதவீத உரம் இருந்தால் செடி மற்றும் பழங்கள் நன்கு வளர்ந்து விளைச்சல் தரும்.

Gardening tips: மாடித்தோட்டத்தில் டிராகன் பழச்செடி வளர்க்க முடியுமா? | Gardening Tips Can You Grow Dragon Fruit

  1. தொட்டி, காலநிலை மற்றும் மண் கலவை ஆகிய அனைத்தும் தயாராக இருக்கும் சமயத்தில் ஆரோக்கியமான செடியை தேர்ந்தெடுத்து வைக்கவும்.
  2. டிராகன் செடியானது குறைந்தபட்சம் 12 இன்ச் நீளம் இருப்பது அவசியம்.
  3. அடுத்து மண்ணில் துளையிட்டு, செடியை நட்டு வளர்க்க வேண்டும்.
  4. மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியாக இருந்தால் டிராகன் பழச் செடி 12 முதல் 18 இன்ச் செடி அளவுக்கு வளரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker