கோடையில் தினம் ஒரு கொய்யா: கிடைக்கும் அற்புதமான 3 நன்மைகள் என்ன?
தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக காணப்படுகின்றது.
இதில் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் தோலிற்கு நன்மை பயக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிக அளவில் கொண்டுள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன்படும் மெக்னீசியமும் கொய்யாவில் நிறைந்துள்ளது.
கொய்யாப் பழம் கருவுறுதலை மேம்படுத்தும் ஃபோலேட் எனப்படும் கனிமச்சத்தினையும் கொண்டுள்ளது. இதிலிருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்த அளவினை சீராக வைக்க உதவுகின்றது.
இது தவிர இதை தினமும் நாம் உணவில் சேர்ப்பதன் %லம் அதிகமாக இரண்டு நன்மைகள் கிடைக்கின்றது அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை பலரும் அறிவதில்லை.
இந்த பழம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தல் என இன்னும் பல நன்மைகளை கொண்டுள்ளது. கொய்யாப்பழம் குளிர்ச்சியானது. இதை கோடையில் சாப்பிடவது மிகவும் நல்லது.
குடல் ஆரோக்கியம்: கொய்யா குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்பினால் தினமும் கொய்யாவை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
இது தவிர, கொய்யா உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். அதிக வயிறு பிரச்சனை மற்றும் அலசர் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கொய்யா பழத்தை உட்கொள்வது நல்லது.
இதய ஆரோக்கியம்: கொய்யாவில் காணப்படும் கூறுகள் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.
ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கொய்யாப்பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேன்படுத்தலாம். கொய்யாவில் நல்ல அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இதன் காரணமாக எடை கட்டுக்குள் இருக்கும்.