1கப் ராவாவும்,வாழைப்பழம் இருக்கா? அப்போ ரமழானுக்கு இத செய்ங்க
ரமழான் தொடங்கி விட்டாலே பல விதவிதமான சாப்பாடுகளை சாப்பிடுவார்கள். அதிலும் உடல் நீண்ட நேரம் அப்படியே உணவின்றி இருப்பதால் உடலில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறைவாக காணப்படும்.
இந்த நேரத்தில் நாம் மதலில் சாப்பிடும் போது ஏதாவது இனிப்பு பொருட்களை சாப்பிட்டு தான் நோன்பை முறிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தான் இந்த பதிவில் இலங்கை முறையில் செய்யப்படும் ரவா வாழைப்பழம் இனிப்பு பண்டம் ஒன்றை பார்க்கப்போகின்றாம்.
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்
- ரவா
- சக்கரை
- தேங்காய் பொளடர்
- பால்
செய்முறை
முதலில் கனிந்த வாழைப்பழம் இரண்டை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நன்றாக கரண்டி ஒன்று வைத்து பிசைந்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி நசுக்கிய வாழைப்பழத்தை போட வேண்டும். பின்னர் அரை கப் அளவு ரவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதை 5 நிமிடங்கள் கிண்ட வேண்டும். பின்னர் அரை கப் அளவிற்கு தேங்காய் பௌடர் சேர்க்க வேண்டும். இதையும் நன்றாக கலந்து விட வேண்டும். இது நன்றாக கலந்து வந்ததும் பால் சேர்த்து கிண்ட வேண்டும்.
பின்னர் இதில் சக்கரை சேர்த்து கிண்ட வேண்டும். இது ஒரு கெட்டி பதத்திற்கு வந்ததும் கையை பயன்படுத்தி சூடு இருக்கும் போதே உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி அந்த உருண்டைகளை லேசாக வேக வைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்து ரமழானை இனிதே தொடங்கலாம். இது செய்வதற்கும் சுலபம் அது மட்டுமன்றி பெரியவர் சிறியவர் என எல்லோரும் சாப்பிடலாம்.