ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்: தேங்காய் எண்ணையில் இந்த இலையை சேருங்க

ஒவ்வொரு பெண்ணும் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புவது ஒருபோதும் தவறில்லை. சூழல் மாசுபாடு மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான பொருட்களைப் பயன்படுத்து காரணமாக முடி மிகவும் பலவீனமடைந்து வேகமாக உதிரத் தொடங்குகிறது.

இது தவிர ஒருவருக்கு தொடர்ச்சியாக முடி உதிர்வு ஏற்பட்டால் அதே இடத்தில் முடி வளர்ச்சி நின்றுவிடும். இதற்கு பெண்கள் ஏன் ஆண்கள் கூட பல்வேறு வகையான முடி எண்ணெய்கள், மற்றும் ஷாம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

இது உடலுக்கு ஆரோக்கியம் இல்லை. இது முற்றிலும் தவறு. இதன் காரணமாக முடி உதிர்வு அதிகமாக தான் காணப்படும். எனவே இதற்காக வீட்டில் அநேக வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துகின்றனர். அவற்றில் ஒன்றை தான் நாம் இன்று இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்: தேங்காய் எண்ணையில் இந்த இலையை சேருங்க | Hair Crowth Beauty Kerala Girls Coconut Oil Neemமுடி வளர்ச்சிக்கு வேம்பின் இலைகள் பெரிதும் உதவும். எனவே முதலில், புதிய வேப்ப இலைகளைக் கழுவி உலர வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். அதில் வேப்ப இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

இந்த எண்ணெயின் நிறம் கருமையாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். எண்ணெயின் நிறம் மாறியதும், அதை வடிகட்டி, குளிர விடவும். இதற்குப் பின்னர் நீங்கள் இந்த எண்ணெயை ஒரு போத்தலில் சேமித்து வைக்கலாம்.

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்: தேங்காய் எண்ணையில் இந்த இலையை சேருங்க | Hair Crowth Beauty Kerala Girls Coconut Oil Neemஇந்த எண்ணெயை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவி சிறிது நேரம் மெதுவாக மசாஜ் செய்யவும். குறைந்தது 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தலைமுடியில் அப்படியே விடவும்.

அதன் பின்னர் இரசாயனம் அற்ற ஷாம்பூவை தடவி முடியை கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். தேங்காய் எண்ணெய்யை வேப்பம்பூவுடன் கலந்து தடவுவதால் உச்சந்தலையில் உள்ள அழுக்கு, பொடுகு மற்றும் தொற்றுநோயை அகற்ற உதவுகின்றது.

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம்: தேங்காய் எண்ணையில் இந்த இலையை சேருங்க | Hair Crowth Beauty Kerala Girls Coconut Oil Neemதேங்காய் எண்ணெயை வேப்பம்பூவுடன் கலந்து தடவினால் முடிக்கு ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தையும் அளிக்கும். இதனால் முடியின் வேர்கால் வலுவாகி உதிர்வு குறைவாகும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் வேம்பு எண்ணெயை உங்கள் தலைமுடியில் தொடர்ந்து தடவி வந்தால் சாதாரணமாக முடி வளர்வதை விட விரைவாக வளரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker