ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைமருத்துவம்

தொப்பை ரொம்ப அசிங்கமாக இருக்கா? அப்போ இந்த விஷயங்களை அடிக்கடி செய்ங்க

பொதுவாக தற்போது பலரும் தொப்பை அதிகரிப்பு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள்.

தொப்பை வந்து விட்டால் அதனை அவ்வளவு எளிதில் குறைக்க முடியாது. சரியான டயட் பிளானை பின்பற்றி வந்தாலும் சில சமயங்களில் தொப்பை குறையாமல் இருக்கும்.

குறிப்பிட்ட ஒரு நபருக்கு தொப்பை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்பது உள்ளிட்டவைகளை கூறலாம்.

அதுவும் தற்போது இருக்கும் நவீனமயமாக்கலினால் பெரும்பாலானோர் ஒட்கார்ந்த இடத்திலே இருந்து வேலை பார்க்கிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் தொப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

மனித உடலில் மற்ற இடங்களில் கொழுப்பு தேங்குவதை விட வயிற்றுப்பகுதியில் அதிகமாக தேங்கும். இதன் விளைவாக உடலில் பல ஆபத்தான நோய்களும் ஏற்படலாம்.

அப்படியாயின் உட்கார்ந்த இடத்திலிருந்து வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை எப்படி கரையச் செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தொப்பை ரொம்ப அசிங்கமாக இருக்கா? அப்போ இந்த விஷயங்களை அடிக்கடி செய்ங்க | How To Reduce Body Weight

1. நேராக அமர்ந்து வேலை பார்த்தல்

பொதுவாக அமர்ந்த இடத்தில் வேலை பார்க்கும் போது நாம் சரியானதொரு நிலையில் இல்லாமல் அமர்ந்திருப்போம். இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால் கதிரையில் சரியான நிலையில் அமர வேண்டும். இப்படி உட்கார்வதனால் முதுகுதண்டுவடம் நேராக இருப்பது மட்டுமின்றி, தொப்பையும் குறையும். “ஒருவர் நேராக நிமிர்ந்து உட்கார்வதன் மூலம் ஒரு நாளைக்கு 350-க்கும் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன…” என ஆய்வுகள் கூறுகின்றன.

2. அதிகமாக நீர் அருந்துதல்

உடலுக்கு நீர்ச்சத்து அதிகமாக தேவை. உடலில் நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக இது வயிற்று உப்புசத்தைத் தூண்டி, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

இப்படியான நிலையில், உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பது செரிமானம் மற்றும் மெட்டபாலிசம் மேம்படும். கொழுப்புக்களை உடைக்க உடலை நீரேற்றத்துடன் வைத்து கொள்ள வேண்டும். தொப்பை பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகமாக நீர் அருந்தினால் காலப்போக்கில் தொப்பை குறையும்.

3. சுவாச பயிற்சி செய்தல்

சிலருக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது தொப்பை வரலாம். இது ஆய்வுகளின் மூலம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்டிசோல் அளவு அதிகரிக்கலாம். இதன் விளைவாக அவர்கள் அதிக உடல் பருமனுடன் காணப்படுவார்கள். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சுவாசப் பயிற்சிகள் அல்லது பிராணயாமம் செய்யலாம். இது வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker