ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைமருத்துவம்

பேரிச்சம்பழம் சாப்பிடும் பொழுது “இந்த” தவறுகளை மறந்தும் செய்யாதீங்க.. ஆபத்து நிச்சயம்

வழக்கமாக நாம் சாப்பிடும் நட்ஸ் வகைகளை விட “பேரிச்சம்பழம்” ஒரு சத்தான நட்ஸ் வகையாகும்.

இதில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.

எவ்வளவு ஊட்டசத்துக்கள் இருந்தாலும் ஒரு உணவை சரியான நேரத்தில் உட்க்கொள்ளும் பொழுது தான் அதன் முழு பலனை பெற முடியும். சிலர் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.

மாறாக மருத்துவ தகவல்களை தேடிப் பார்க்கும் பொழுது பேரீச்சம்பழம் ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மை தெரியவந்துள்ளது.

பேரிச்சம்பழம் சாப்பிடும் பொழுது “இந்த” தவறுகளை மறந்தும் செய்யாதீங்க.. ஆபத்து நிச்சயம் | Do Dates Have Side Effectsஅப்படியாயின் பேரீச்சம்பழம் சாப்பிடும் பொழுது நாம் விடும் தவறுகள் குறித்து எமது பதிவில் பார்க்கலாம்.

1. வெறும் வயிற்றில் பேரிச்சம்பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனெனின் பேரீச்சம்பழத்தில் சுமார் 90% சர்க்கரை உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். இதனை தொடர்ந்து செய்து வரும் ஒருவர் நாளடைவில் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பேரிச்சம்பழம் சாப்பிடும் பொழுது “இந்த” தவறுகளை மறந்தும் செய்யாதீங்க.. ஆபத்து நிச்சயம் | Do Dates Have Side Effects2. பேரிச்சம்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது உடல் எடை அதிகரிப்பு, செரிமானப் பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை அளவுகளில் ஏற்றத்தாழ்வு ஆகிய பாதிப்புக்கள் வரலாம். தினசரி 2-3 பேரிச்சம்பழம் சாப்பிட்டால் போதுமானது.

3. பேரிச்சம்பழம் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் காலையில் மாத்திரம் எடுத்து கொள்வது சிறந்தது. ஏனெனின் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் அதனை முழு பலனை பெற்றுக் கொள்ள முடியாது.

பேரிச்சம்பழம் சாப்பிடும் பொழுது “இந்த” தவறுகளை மறந்தும் செய்யாதீங்க.. ஆபத்து நிச்சயம் | Do Dates Have Side Effects4. பிற உணவுப் பொருட்களுடன் பேரிச்சம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் ஒரு உணவு பொருளின் முழு பலனையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் ஊட்டச்சத்துக்களை உடல் சிறப்பாக உறிஞ்ச முடியும்.

5. பேரிச்சம்பழம் ஒரு ஆரோக்கியமான உணவாக பார்க்கப்படுகின்றது. இதனால் தினசரி மறக்காமல் உட்க் கொண்டால் சிறந்த பலனை பார்க்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker