ஆரோக்கியம்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

நாவூரும் சுவையில் முட்டை குழம்பு… வெறும் 15 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி..

பொதுவாகவே மிகவும் மலிவான விலையில் அதிக ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகளின் பட்டியலில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றது.

கூந்தல் வளச்சி தொடக்கம் இதய ஆரோக்கியம், எலும்பு வளர்ச்சி, உடல் எடை பராமரிப்பு மற்றும் தோல் பராமரிப்பு என பல்வேறு வகையிலும் முட்டை அதன் ஆரோக்கிய பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும்.

நாவூரும் சுவையில் முட்டை குழம்பு... வெறும் 15 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி? | Simple And Tasty Egg Gravy Recipe In Tamil

இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை கொண்ட முட்டையை கொண்டு வெறும் 15 நிமிடங்களில் எவ்வாறு அசத்தல் சுவையில் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 5 (வேக வைத்தது)

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

சோம்பு – 1 தே.கரண்டி

கடுகு – 1/2 தே.கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

சீரகத் தூள் – 1/2 தே.கரண்டி

குழம்பு மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

உப்பு – சுவைக்கேற்ப

மிளகு தூள் – 1 தே.கரண்டி

தண்ணீர் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

நாவூரும் சுவையில் முட்டை குழம்பு... வெறும் 15 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி? | Simple And Tasty Egg Gravy Recipe In Tamil

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து  தண்ணீர் ஊற்றி முட்டைகளை போட்டு வேக வைத்து, தோல் நீக்கி 2 துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

நாவூரும் சுவையில் முட்டை குழம்பு... வெறும் 15 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி? | Simple And Tasty Egg Gravy Recipe In Tamil

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கி, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து, 2 நிமிடங்கள் வரையில் நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.

நாவூரும் சுவையில் முட்டை குழம்பு... வெறும் 15 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி? | Simple And Tasty Egg Gravy Recipe In Tamil

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, எண்ணெய் பிரியும் வரையில் நன்றாக கொதிக்கவிட்டு, சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

இறுதியில் வேகவைக்கப்பட்ட முட்டையை சேர்த்த 5 நிமிடங்கள் வரையில் வேகவிட்டு கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அருடையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முட்டை குழம்பு

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker