பூஜை விளக்கை இனி கை வலிக்க தேய்க்க வேண்டாம்.. இலகுவாக பளபளப்பாக மாற்றுவது எப்படி..
பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வீட்டில் உள்ள குடும்ப பெண்கள் பூஜை பொருட்களை கழுவி சுத்தம் செய்வதற்கு மிகுந்த கஷ்டத்தை எதிர்க்கொள்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக நல்ல நாள், அமாவாசை, பௌர்ணமி என கடவுளை வழிபடும் முக்கிய பண்டிகை நாட்களில் பூஜையறை மற்றும் பூஜை பாத்திரங்களும் பளபளப்பாக மின்ன வேண்டும் என நினைப்பார்கள்.
இவ்வாறு மின்ன வைப்பதற்காக பூஜைக்கு வைக்கும் பாத்திரங்களை இரண்டு நாட்களுக்கு பின்னரே சுத்தம் செய்து விட்டு பார்த்தால் கருத்து விடுகின்றன. இதனால் பூஜையன்று தான் காலையில் எழுந்து அவசர அவசரமாக சுத்தம் செய்வார்கள்.
இப்படியான நேரங்களில் வீட்டிலுள்ள ஒரு சில பொருட்களை கொண்டு பூஜை பொருட்களை சுத்தப்படுத்தலாம். அப்படியான வழியை நாம் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- லெமன் சால்ட் – 2 தேக்கரண்டி
- உப்பு – 1 தேக்கரண்டி
- வினிகர் – 2 தேக்கரண்டி
- டிஷ்வாஷ் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 3 தேக்கரண்டி
செய்முறை
முதலில் லெமன் சால்ட், உப்பு வினிகர் ஆகிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.
அதன் பின்னர் பாத்திரத்தை விளக்குவதற்காக டிஷ்வாஷ் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு வீட்டில் உள்ள அனைத்து பூஜை பொருட்களை இந்த இரண்டு கலவைகளையும் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இப்படி செய்தால் அனைத்து பொருட்களும் பளிச்சென்று மாறும், இதனால் கஷ்டப்பட அவசியம் இருக்காது.