பஞ்சு போல இட்லி வேண்டுமா? இந்த இரண்டு பொருள் சேர்த்தால் போதும்
இட்லி நன்கு பஞ்சு போன்று வருவதற்கு நாம் சேர்க்க வேண்டிய இரண்டு பொருட்களைக் குறித்தும், அதனை எவ்வாறு அரைப்பது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இட்லி என்றாலே அனைவரது முகத்திற்கு முன்பு வருவது பஞ்சு போன்று இருக்கும் இட்லி தான். நான் நினைக்கும் விதத்தில் இட்லி சில தருணங்களில் வருவதில்லை.
அவ்வாறு பஞ்சு போன்று குஷ்பு இட்லி வருவதற்கு, சில டிப்ஸ்களை நாம் கடைபிடிக்க வேண்டும். இதனை நாம் கடைபிடித்தால், கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே பஞ்சு போன்ற இட்லி தயாரிக்கலாம்.
இரண்டு கப் பச்சரிசி மற்றும் ஒன்றரை கப் இட்லி அரிசி எடுத்து 3 முறை கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு அளவிற்கு உளுந்தும், இத்துடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவிவிட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
தற்போது அரை கப் அளவிற்கு மாவு ஜவ்வரிசி மற்றும் அவல் சேர்க்க வேண்டும். இதையும் ஒரு முறை கழுவி விட்டு தண்ணீர்ல் ஊறவைக்கவும்.
சுமார் 5 மணி நேரம் கழித்து ஜவ்வரிசி மற்றும் அவலை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின்பு இத்துடன் உளுந்தையும் தனியாக அரைத்து எடுக்கவும்.
பின்பு அரிசியை அரைத்த பின்பு இரண்டையும் நன்றாக உப்பு போட்டு கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின்பு இட்லி ஊற்றினால் பஞ்சு போன்று இட்லி கிடைத்துவிடும்.