ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

வீட்டில் காய்கறி மட்டும் தான் இருக்கா? அசைவ சுவையில் காய்கறி சூப் இப்படி செய்ங்க

பொதுவாக பல சத்துக்கள் காய்கறிகளில் உண்டு காய்கறிகளை நாம் தினமும் உணவில் எடுத்துக்கொள்ளுதல் அவசியமாகும். ஆனால் இதை குழந்தைகள் அவ்வளவு பெரிதாக விரும்ப மாட்டார்கள்.

காய்கறிகளை அவர்கள் விருப்பப்படி சமைத்து கொடுப்பது நம் கடமையாகும். அவசரமாக ஏதாவது பசிக்கு செய்ய வேண்டும் என்றால் நம்மில் பலர் சூப் செய்வது வழக்கம். இதை காய்கறிகள் மட்டும் வைத்து சுவையாக செய்யலாம்.

காய்கறிகளின் சத்துக்கள் எமது உடலுக்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த பதிவில் காய்கறிகளை வைத்து எப்படி சுவையான சூப் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் காய்கறி மட்டும் தான் இருக்கா? அசைவ சுவையில் காய்கறி சூப் இப்படி செய்ங்க | How To Prepare Vegetable Soup For Healthy Food

தேவையான பொருட்கள்

  • 2 கேரட் 10
  • 12 பீன்ஸ் 1 கப்
  • சோளம் கால் கப்
  • முட்டைகோஸ் கால் கப்
  • பெரிய வெங்காயம் 1
  • டேபிள்ஸ்பூன் சோள மாவு
  • 2 பல் பூண்டு
  • தேவையான அளவு மிளகுதூள்
  • தேவையான அளவு ஸ்பிரிங் ஆனியன்
  • 1 டேபிள்ஸ்பூன் சோயாசாஸ்
  • தேவையான அளவு சூப்
  • ஸ்டிக்ஸ் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு எண்ணெய்

செய்மறை

முதலில் செய்ய வேண்டியது எல்லா காய்கறிகளையும் நறுக்கி தனியாக எடுத்து வைக்க வேண்டும். இதன் பின்னர் சோளத்தை எடுத்து அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் காய்கறி மட்டும் தான் இருக்கா? அசைவ சுவையில் காய்கறி சூப் இப்படி செய்ங்க | How To Prepare Vegetable Soup For Healthy Foodஇதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

பச்சை வாசம் போனதும் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் சோளம் மற்றும் முட்டை கோசை அதில் போட்டு கிளறவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள சோளத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்படி செய்வதால் சூப் கெட்டியாகி நல்ல பதத்திற்கு வரும். இப்பொழுது இந்த கலவையுடன் 5 கப் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மூடி போட்டு குறைந்தது 20 நிமிடம் வரை வேக வைக்கவும்.

வீட்டில் காய்கறி மட்டும் தான் இருக்கா? அசைவ சுவையில் காய்கறி சூப் இப்படி செய்ங்க | How To Prepare Vegetable Soup For Healthy Food

20 நிமிடத்திற்குப் பின்னர் காய்கறிகள் வேகவில்லை எற்றால் இன்னும் ஒரு 4 அல்லது 5 நிமிடம் வேக விடவும்.

சூப் தண்ணியாக இருந்தால் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கின்ற சூப்புடன் சேர்த்து கலக்கி  ஒரு 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

வீட்டில் காய்கறி மட்டும் தான் இருக்கா? அசைவ சுவையில் காய்கறி சூப் இப்படி செய்ங்க | How To Prepare Vegetable Soup For Healthy Food3 நிமிடத்திற்கு பின்னர் அதில் தேவையான அளவு மிளகுதூள் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

சூப்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நறுக்கி வைத்துள்ள ஸ்பிரிங் ஆனியன் தூவி ஒரு தடவை கிளறி எடுத்தால் சுவையான சூப் தயார். இதில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றன.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker