அசத்தல் சுவையில் மொறு மொறு பிரட் கட்லட்… வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்
மாலை வேலையில் அனைவரும் விரும்பி சாப்பிட நினைக்கு ஸ்நாக்ஸான பிரட் கட்லெட்டை எவ்வாறு வெறும் பத்தே நிமிடத்தில் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மாலை நேரம் ஆகிவிட்டாலே எதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும் அப்போது தேனீர் குடிக்க இதமாக இப்படி மொறு மொறு கட்லட் செய்து அசத்துங்க.
தேவையான பொருட்கள்
ரொட்டித் துண்டுகள் – 4
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
உப்பு, மிளகு, கரம் மசாலா தூள் – தலா 1/2 தே.கரண்டி
மஞ்சள் – 1/2 தே.கரண்டி
வெங்காய விழுது – 1 தே.கரண்டி
கொத்தமல்லி விழுது – 2 தே.கரண்டி
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
ரொட்டி தூள் / கசகசா – 1/2 கப்
மைதா – 1 தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் பிரட் துண்டுகளை சேர்த்து 20 வினாடிகள் ஊறவிட்டு உடனடியாக எடுத்து பிழிந்துக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பொருட்களை அனைத்தையும் போட்டு பேஸ்ட் தாயாரித்துக்கொள்ள வேண்டும்.
சப்பாத்தி மாவு பிசையும் வகையில் நன்றான பிசைந்து அதை உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவத்தில் வெட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பிரட் பவுடர் அல்லது கசகசாவில் மாவுக் கலவையில் தோய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பிரட் கட்லெட்டைப் போட்டு பெரித்து எடுத்தால், அசத்தல் சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரட் கட்லட் தயார்.