ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

இட்லியை இப்படி வித்தியாசமான அரிசியில் செய்து பாருங்க! சுவை பிரமாதம் ஜவ்வாரிசி இட்லி

காலை உணவு செய்யும் போது நாம் அனைவரும் பெரும்பாலும் செய்வது இட்லி தான் இதை அரிசி மாவிலும் ரவாவிலும் செய்வார்கள். ஆனால் இட்லியை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் போது சாப்பிடுவது கொஞ்சம் கடினமாக நினைப்பார்கள்.

எனவே வித்தியாசமான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த இட்லி ஜவ்வாரிசியில் செய்யப்படுகின்றது.ஜவ்வாரிசி எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களைக் கொடுக்கிறது.

ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. அனீமியாவைப் போக்குகிறது. நரம்பு மண்டலத்தை காக்கிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை உறுதிசெய்கிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்

ஜவ்வரசி – ஒரு கப்

ரவை – ஒரு கப்

தயிர் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 1

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

மிளகு – ஒரு ஸ்பூன்

கேரட் துருவியது – ஒரு கப்

தேங்காய் – துருவியது

செய்யும் முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசியை சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். அது ஊறி வந்திருக்கும் நேரத்தில் அதில் ரவை, தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

இவையனைத்தையும் அரை மணி நேரம் தனியாக ஊறவைக்க வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும்.

அனைத்தும் சிவந்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், முழு மிளகு என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்க்க வேண்டும்.

துருவிய கேரட் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து மாவை கலந்துவிடவேண்டும். மாவை நன்றாக அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். அனைத்தும் அப்போதுதான் செட்டாகும்.

பின்னர் இட்லியாக ஊற்றி எடுக்கவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, சாம்பார் என எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker