ஐஸ்கிறீம் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன.. உணவியல் நிபுணரின் கருத்து
நாம் பலவகையான உணவுகளை ஒவ்வொரு நேரமும் உண்ணுகிறோம். அப்படி உண்ணும் போது அவை நமது உடலில் பல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது சிலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது.
அதன்படி இன்றைய உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது ஐஸ்கிரீம் என்று கூற முடியும். ஆனால் இந்த ஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் உணவியல் நிபுணரின் கருத்துப்படி பார்க்கலாம்.
வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலநிலைகளில் உடலில் உள்ளே இருக்கும் சூட்டை தணிப்பதற்கு நம்மில் பலரும் குளிர்ச்சியான பானங்கள் உணவுகள் என விருப்பப்பட்டு உண்போம்.
அப்படியான உணவுகளில் ஒன்று தான் ஐஸ் கிரீம். இதில் அதிக பால் கொழுப்பு உள்ளடக்கம் சேர்க்கப்படுகிறது. இதனால் உணவியல் நிபுணர் கூறுவது இந்த ஐஸ் கிரீமை நாம் உண்ணும் போது உணவினால் தூண்டப்பட்ட தெர்மோஜெனீசிஸ் (thermo genesis) எனப்படும் ஒரு செயல்முறை உடலில் ஏற்படுகிறது.
இந்த செயல்முறை உணவின் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் போது உருவாகும் வெப்பத்தைக் குறிக்கிறது என கூறியுள்ளார்.
ஐஸ் கிரீமில் இருக்கும் பால் கொழுப்பு போன்ற பொருட்களும் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது புரதங்கள் போன்றவை பிற ஊட்டச்சத்துக்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன.
இந்த காரணத்தினால் கொழுப்பு வளர்சிதை மாற்றமடைந்து இதில் இருந்து வெப்பத்தை உருவாக்கும். இதை கனடாவின் மவுண்ட் செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழகத்தில் உணவு ஆய்வாளர் டாக்டர் போடன் லுஹோவியின் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
உடலில் பெரும்பாலான கொழுப்பு உடைக்கப்படும் போது அதிலிருந்து வெப்பம் வெளிவருகிறது. இந்த செயன்முறையானது உணவு தூண்டப்பட்ட தெர்மோஜெனீசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் தெளிவாகும் ஒரு விஷயம் என்வென்றால் ஐஸ்கிரீமை உண்ணும் போது அது உடல் வெப்பநிலையை தற்காலிகமாக உயர்த்தக்கூடும் என்பதை தெளிவாகின்றது.
உடலின் வெப்பத்தை தணிக்க வேண்டும் என்றால் மோர், எலுமிச்சை சாறு, நன்னாரி, இளநீர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் உடலை குளிர்விக்கலாம். இல்லையென்றால் முலாம்பழம் அல்லது வெள்ளரி போன்ற நீரேற்றும் காய்கறிகளையும் சாப்பிடலாம்.