ஃபேஷன்அழகு..அழகு..உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு: செலவே இல்லாமல் செய்யக் கூடிய வீட்டு வைத்தியம்

பொதுவாக பெண்கள் தற்போது அதிகமான கூந்தல் உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைபடுகிறார்கள்.

இதனை உணவுகள் பயன்பாடு , சிகிச்சை முறைகள் மற்றும் மூலிகை எண்ணெய்கள் பாவணை மூலம் கட்டுபடுத்த முடியும்.

அந்தவகையில் தலைமுடி பிரச்சினைகளை எளிய முறையில் குறைக்ககூடிய ஒரு மூலிகை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு: செலவே இல்லாமல் செய்யக் கூடிய வீட்டு வைத்தியம் | Permanent Solution To Hair Loss

பொருட்கள்

  • வேம்பாளம் பட்டை – 10 லிருந்து 15 கிராம்
  • விளக்கு எண்ணெய் – 100 ml
  • தேங்காய் எண்ணெய் –  100 ml
  • பச்சைக் கற்பூரத்தூள் –  1/2 ஸ்பூன்

செய்முறை

தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு: செலவே இல்லாமல் செய்யக் கூடிய வீட்டு வைத்தியம் | Permanent Solution To Hair Loss

  • ஒரு சிறிய பவுலில் வேம்பாளம் பட்டையை சிறிய சிறிய துண்டுகளாக உடைத்துப் போட்டு அதில் பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும். பின்பு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயையும், விளக்கு எண்ணெயையும் ஒன்றாக ஊற்றி அதனுடன் கலந்து ஒரு மூடி அளவு போட்டு ஒரு நாள் ஊற வைத்து வைக்கவும்.
  • மறுநாள் எடுத்துப் பார்த்தால் அந்த எண்ணெய் நன்றாக சிவப்பு நிறமாக மாறியிருக்கும்.

தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு: செலவே இல்லாமல் செய்யக் கூடிய வீட்டு வைத்தியம் | Permanent Solution To Hair Loss

  • அதனை அடுத்து இரண்டு நாள் இந்த எண்ணெயை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.
  • இதனை உங்களுடைய வீட்டில் வெயில் இல்லை என்றால் டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்யலாம்.
  • அடுத்தபடியாக அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விட்டு அந்த தண்ணீருக்கு மேலே இந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து, பத்து நிமிடம் போல சூடு செய்து அடுப்பை அணைத்து விடவும்.
  • பிறகு இந்த எண்ணெயை நன்றாக ஆறவிட்டு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு: செலவே இல்லாமல் செய்யக் கூடிய வீட்டு வைத்தியம் | Permanent Solution To Hair Loss

பாவணை முறை

  1. எண்ணெயை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு தலையில் நன்றாக படும்படி வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
  2. இதன் பின்னர் சரியாக 1 – 2 மணி நேரம் இந்த எண்ணெயை தலையில் ஊற வேண்டும்.
  3. பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைமுடியை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.

தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு: செலவே இல்லாமல் செய்யக் கூடிய வீட்டு வைத்தியம் | Permanent Solution To Hair Loss

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker