ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

முகத்தின் அழகிற்கு ஒருபோதும் இந்த பொருட்களை பயன்படுத்த கூடாது! இது தான் காரணமா..

அழகுக்காக நாம் பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றில் நமக்கே தெரியாமல் தவறுகள் செய்கின்றோம். அந்த வகையில் முகத்திற்கு எப்பொருட்களை பயன்படுத்த கூடாது என இந்த பதிவில் பார்க்கலாம்.

நமது தோலுக்கு எதாவது ஒரு பொருளை பயன்படுத்துவதற்கு முன்னர் அதன் சரியான தரத்தை கண்டறிவது முக்கியம். சருமம் என்பது மிகவும் மென்மையானது. இந்த சருமம் அதன் அழகை இழப்பதற்கான முக்கிய காரணம் நாம் செய்யக்கூடிய சில தவறான விஷயங்கள் தான்.

சிலர் சன்ஸ்கிரீனை கோடை காலத்தில் பயன்படுத்துகின்றனர். அதன் பின்னர் அதை அடுத்த ஆண்டிற்கு சேமித்து வைக்கின்றனர். இதனால் இதன் தரம் இழக்கப்பட்டு காலாவதி திகதியும் குறைந்து வருகின்றது.

சிலர் எலுமிச்சையின் சாற்றை தோலில் பூசுவார்கள். ஆனால் இது நன்மை தராது. அதில் உள்ள அதிக அளவு சிட்ரிக் அமிலம் உங்கள் சருமத்தை சேதப்படுத்தி தீக்காயங்களை ஏற்படுத்தும். இது வெடிப்பு மற்றும் எரிச்சலுக்கும் வழிவகுக்கும்.

டூத்பேஸ்ட் கரும்புள்ளிகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை முகத்திற்கு பயன்படுத்த கூடாது. முகத்தில் உள்ள தோல் மிகவும் மென்மையானது.

இந்த டூத்பேஸ்டில் உள்ள கெமிக்கல் தோலில் படும் போது தோல் முற்றிலும் அதன் அழகை இழக்கும்.எனவே, முகத்தில் பற்பசையைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மற்றும் அதற்குப் பதிலாக பாதுகாப்பான தீர்வுகளைப் பயன்படுத்துவது எப்போதும் அவசியம்.

முகத்தின் அழகிற்கு ஒருபோதும் இந்த பொருட்களை பயன்படுத்த கூடாது! இது தான் காரணமா? | Never Use These Products For Facial Beautyஎல்லோரும் கூறுவார்கள் உடலின் அழகிற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்ததென்று.  தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது.

முகத்தின் அழகிற்கு ஒருபோதும் இந்த பொருட்களை பயன்படுத்த கூடாது! இது தான் காரணமா? | Never Use These Products For Facial Beautyஆனால் இது சுமார் 90% நிறைவுற்ற கொழுப்பு, இது நமது தோலின் துளைகளை அடைத்துவிடும். இதை அதிகம் பயன்படுத்தினால் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இதை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker