தலையில் உள்ள பொடுகு நீங்க வேண்டுமா? எலுமிச்சை, வெள்ளரி ஷாம்பூ எப்படி செய்வது..
தலையில் உள்ள பொடுகு தொல்லையை எளிதில் விரட்ட வீட்டிலேயே எலுமிச்சை, வெள்ளரி ஷாம்பூ எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
அதிகமான அழுக்கு மற்றும் மாசுக்களால் சூரிய ஒளி பட்டு தலையில் பொடுகு தொல்லை ஏற்படுகிறது. இதனால் முடி அதன் இயற்கையான பிரகாசத்தை இழக்கத் தொடங்குகிறது.
இந்த பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்யவும் முடியும். ஒரு பெரிய எலுமிச்சை மற்றும் நடுத்தர அளவுள்ள வெள்ளரிக்காய் இரண்டையும் தோலுரித்து, சிறிய துண்டுகளாக வெட்டவும்.
அதில் உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதை உச்சந்தலையில் தடவி சில நிமிடங்களுக்குப் பிறகு நன்கு அலசவும். இது உச்சந்தலையில் உள்ள அழுக்கு, பிசுபிசுப்பு தன்மை மற்றும் கொழுப்பை போக்க உதவும்.
இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு நீக்கவும் உறுதியளிக்கிறது. இதை நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஷாம்பூ போல பயன்படுத்தலாம்.
இது வெளிப்புற பாவனையாக இருந்தாலும் நீங்கள் உங்கள் உணவிலும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் சூடு கூடுதலாக இருந்தால் முடி கொட்டுவதை நிறுத்த முடியாது.