கால்களில் இருந்து இறந்த கலங்களை நீக்கி பளீச் என்று ஆக்கணுமா.. இந்த பொருள் போதும்
முகத்தை பராமரிப்பது போல நமது கால்களையும் பராமரிப்பது அவசியம். இந்த பதிவில் கால்களை எப்படி பளீச் என்று வைத்ருப்பது என்பதை பார்க்கலாம்.
கால்கள் எப்போதும் சுத்தமாக இருப்பது அவசியம். இந்த கல்கள் பளீச் என்று இருக்க வேண்டும் என்றால் நாம் அதிலுள்ள இறந்த கலங்களை அகற்ற வேண்டும்.
இதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
நீங்கள் பேஸ்ட்டை எடுத்து இறந்த சருமத்தை வெளியேற்ற உங்கள் கால்களில் மெதுவாக மசாஜ் செய்யவும். இப்படி செய்து 15 நிமிடத்தில் கழுவ வேண்டும்.
காபி துருவலை சிறிது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து, கால்களில் இருந்து இறந்த சருமத்தை அகற்ற பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் கரைசல் பாதங்களை மென்மையாக்கும்.
இது இறந்த சருமத்தை ஸ்க்ரப்பிங் செய்வதை எளிதாக்கும். இந்த ஸ்கிரப்பிங் முறைகளை பின்பற்றி அதை செயல்படுத்தினால் உங்கள் கால்களை நீங்களே அழகாக வைத்திருக்கலாம்.