அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா.. தினமும் இதை செய்ய மறக்காதீங்க

அன்றாடம் சில பழக்க வழக்கங்களை மட்டும் கடைபிடித்து உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சினை உடல் எடைதான். உடல் எடையைக் குறைப்பதாக அதிகமான உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் எடுத்து வருகின்றனர்.

ஆனால் இவை இரண்டினையும் தொடர்ந்து பின்பற்றுவது என்பது கடினமான காரியமாகும். அவ்வாறு சிரமப்படுபவர்கள் மிகவும் எளிய வழிமுறைகளை பின்பற்றி எவ்வாறு உடல் எடையைக் குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நாம் உண்ணும் உணவினை நன்றாக மென்று விழுங்க வேண்டும். அதே போன்று வேகமாகவும் உண்ணக்கூடாது. அவ்வாறு வேகமாக உண்பதால் உடல் எடை அதிகமாகும்.

உணவை அதிகமாக ஒரே நேரத்தில் உட்கொள்ளக்கூடாது. அவ்வாறு பசி ஏற்பட்டால், நான்கு அல்லது ஐந்து வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ளலாம்.

ஆரோக்கியமில்லாத துரித உணவுகளை உட்கொள்வதால் உடல் கடகடவென அதிகரிக்கும். ஆதலால் ஃபாஸ்ட் புட் உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

புரதம் பசி உணர்வை குறைப்பதிலும், வயிறு நிறைந்த திருப்பதியையும் அளிக்கின்றது. ஆதலால் புரதம் நிறைந்து இருக்கும் உணவினை எடுத்துக் கொண்டால், உடல்பயிற்சி மற்றும் கலோரி கட்டுப்பாடு இல்லாமல் எடையை குறைக்கலாம்.

இதே போன்று நார்ச்சத்து நிறைந்த உணவுகளும் பசியுணர்வை கட்டுப்படுத்தும். ஆதலால் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

`விஸ்கோஸ் பைபர்’ எனப்படும் ஒருவகையான நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பீன்ஸ், ஓட்ஸ், அஸ்பாரகஸ், ஆரஞ்சு, ஆளி விதைகள் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம். இவையும் உடல் எடையைக் குறைக்கும்.

தூக்கமின்மையால் ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகள் உடல் எடையை அதிகரிக்க செய்வதுடன், டைப் 2 நீரிழிவையும் ஏற்படுத்தி, மன அழுத்தத்தினையும் ஏற்படுத்துகின்றது.

சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அரை லிட்டர் தண்ணீர் குடித்தால், பசி உணர்வு கட்டுப்படுவதுடன், உடல் எடையும் குறையும். ஆகவே ஒரு 12 வாரங்களுக்கு சாப்பிடும் தண்ணீர் பருகினால் நிச்சயம் உடல் எடை குறையும்.

அதே போன்று சாப்பிடும் போது கவனத்தை சிதற விடக்கூடாது. செல்போன், ரிவி இவற்றினை பார்த்து சாப்பிடுவதால் அதிகமான உணவை உட்கொண்டு உடல் எடையும் அதிகமாகிவிடுகின்றது.

கடைகளில் கலர் கலராக காணப்படும் குளிர்பானங்களும் உடல் எடையை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker