ஆண்களுக்கு வழுக்கை வருவதற்கான காரணம் இதுதான்
அதிகமான ஆண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்ககூடியது முடி கொட்டும் பிரச்சனை, இப்போது வயது வித்தியாசம் இன்றி பரவலாக காணப்படுகின்றது.
அது முடிகொட்டுதல் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் முடி வளர்ச்சியே தடை பட்டு போய்விடும்.
இந்த நோய்கு பெயர் ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா என்று அழைக்கப்படுகிறது. இதுவே முடி உதிர்தலுக்கு முக்கியமான காரணமாகும்.
இந்த நோய் ஹார்மோன் சார்ந்த பிரச்சனையாகவும் இருக்கலாம் அல்லது மரபணு சார்ந்த பிரச்சனையாகவும் இருக்கலாம்.
இவ்வாறான ஆண்களுக்கு வரும் வழுக்கை பிரச்சனையை குறைக்கும் சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
வழிகள்
1.நீங்கள் உண்ணும் உணவை மிகவும் சத்தானவையாக உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். துரித உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு இந்த பிரச்சனை கட்டாயம் வரும்.
2. தூக்கமென்பது ஒரு மனிதன் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஓய்வெடுக்க வேண்டும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டுதல் அதிகமாகும்.
3.முடியை பராமரிக்கும் போது ஸ்டைலிங் கருவிகள் மற்றும் சாதனங்கள் என்பவற்றை பயன்படுத்தினால் இந்த பிரச்சனை உண்டாகும்.
4. மன அழுத்தத்தில் இருந்தாலும் முடி கொட்டும். மனதை ஒருநிலைப்படுத்தி மகிழ்ச்சியாக வைத்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.
5. தலைமுடியை இறுக்கமான பற்களை கொண்ட சீப்பில் சீவ கூடாது. அவ்வாறு சீவினால் முடி உதிர்ந்து நாளடைவில் வழுக்கையாக மாறும். உங்கள் தலைமுடியை சீவுவதற்கு மென்மையான முட்கள் கொண்ட இயற்கையான ஃபைபர் தூரிகையைப் பயன்படுத்தவும்.
6. வெந்தயம், நெல்லிக்காய், சிகைக்காய் மற்றும் பிரமி போன்ற ஏராளமான மூலிகைகளை வைத்து வீட்டு வைத்தியத்தின் மூலம் தடுக்கலாம்.