தங்கம் போல் முகம் பளபளக்க வேண்டுமா… அப்போ தேநீரை இப்படி பயன்படுத்துங்க
பொதுவாக பெண்கள், ஆண்கள் என இருபாலரும் முகத்தை அழகாக வைத்து கொள்ள இரசாயன பொருட்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த முயற்சி நிரந்தரமற்றது என சரும பராமரிப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாறாக வீட்டிலுள்ள சில பொருட்களை பயன்படுத்துவதால் முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்து கொள்ள முடியும்.
அந்த வகையில் முகத்தை சுத்தமாக வைத்து கொள்ள ‘சாய் பானி’ அல்லது தேநீர் பயன்படுத்தலாம் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
ஏனெனின் தேநீரின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கின்றன. இதனை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் சருமம் புத்துயிர் பெறுகிறது.
இதன்படி, சருமப் பராமரிப்பு சாய் பானி எப்படி உதவுகின்றது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
க்ரீன் டீ, பிளாக் டீ பயன்படுத்தலாம். இவற்றை தவிர்க்கும் பட்சத்தில் புதினா அல்லது லாவெண்டர் போன்ற மூலிகை டீக்களை பயன்படுத்தலாம்.
1. சூடான தண்ணீரில் தேயிலைத்தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும். தேநீர் தயாரானதும் தூளை வடிக்கட்டி தேநீரை தனியாக ஒரு பவுலிற்கு மாற்றவும்.
2. தேநீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து எடுக்கவும்.
3. பின்னர் முகத்திலுள்ள மேக்கப்பை துடைத்து விட்டு, நன்றாக முகத்தை கழுவவும்.
4. தேநீரில் துணி நன்றாக ஊறிய பின்னர் அதனை பிழிந்து எடுக்கவும்.
5. பிழிந்து எடுத்த துணியை முகத்தில் போட்டுக் கொள்ளவும். கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதிகளில் படும்படி வைப்பது சிறந்தது.
6. பின்னர் முகத்தை நன்றாக மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால் உங்களில் முகத்திலுள்ள இரத்த ஓட்டம் சீராகுகின்றது.
7. இந்த செயற்பாட்டின் பின்னர் முகம் இறுக்கமாக இருந்தால் மாய்ஸ்சரைசர் கொண்டு மசாஜ் செய்யவும்.
சாய் பானி பயன்படுத்துவதன் நன்மைகள்
1. நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது முகத்தை இளமையாக வைத்து கொள்ள உதவுகின்றது.
2. தேயிலையில் அழற்சி எதிர்ப்பு பண்பு அதிகமாக உள்ளது. இது முகப்பரு பாதிப்பை இல்லாமல் ஆக்குகின்றது.
3. சாய் பானியின் வழக்கமான பயன்பாடு சருமத்தின் நிறத்தை பாதுகாக்க உதவுகின்றது.
முக்கிய குறிப்பு
சருமத்தில் ஏதாவது ஒவ்வாமை ஏற்படும் போது அதற்கான மருத்துவரை நாடுவது சிறந்தது.