இவர்கள் நெல்லிக்காய் சாப்பிடவே கூடாதாம்…
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டது. ஒரு சிறிய நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிகமான அளவில் வைட்டமின் சி உள்ளன என்றால் பாருங்கள்.
இவ்வளவு அற்புதமான நெல்லிக்காய் சமையலில் மட்டுமின்றி, இயற்கை மருத்துவத்திலும் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
என்ன தான் நெல்லிக்காய் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும் குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இதை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல. இப்போது யாரெல்லாம் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
அசிடிட்டி
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. மேலும் நெல்லிக்காய் அசிட்டிக் பண்புகளை கொண்டது.
நெல்லிக்காயை உட்கொள்வது நெஞ்செரிச்சலைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஏற்கனவே அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் நெல்லிக்காயை உட்கொண்டால், அது நிலைமையை இன்னும் தீவிரமாக்கும்.
அதுவும் அசிடிட்டி பிரச்சனையைக் கொண்டவர்கள் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை உட்கொண்டால் அது வயிற்று சுவற்றை எரிச்சலடையச் செய்து அசிடிட்டியை தீவிரமாக்கிவிடும்.
இரத்தம் தொடர்பான கோளாறுகள்
நெல்லிக்காய் ஆன்டி-ப்ளேட்லெட் பண்புகளைக் கொண்டது. அதாவது இது இரத்தம் உறைவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டது.
சாதாரண மக்கள் நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அயாபத்தைக் குறைக்கலாம்.
ஆனால் ஏற்கனவே இரத்தம் தொடர்பான பிரச்சனையைக் கொண்டவர்கள் நெல்லிக்காயை உட்கொள்வது நல்லதல்ல.
ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ப்ளெட்லெட் பண்புகள் இரத்தத்தை மெலிதாக்கி சாதாரண இரத்த இரத்த உறைதலை கூட தடுத்துவிடும்.
பின் சிறு காயம் ஏற்பட்டாலும் இரத்தம் உறையாமல் வெளிவந்தவாறு இருக்கும்.
சர்ஜரி செய்ய போகிறவர்கள்
சர்ஜரி/அறுவை சிகிச்சை செய்யப் போகிறீர்களா? அப்படியானால் நெல்லிக்காயை சாப்பிடுவதை சிறிது காலம் தவிர்க்க வேண்டும்.
அதிகமாக நெல்லிக்காயை உட்கொண்டால், இரத்தம் உறையாமல் இரத்தக்கசிவு அதிகமாக ஏற்படும்.
இப்படியே இரத்தம் அதிகமாக கசிந்தால் அது திசு ஹைபோக்ஸீமியா, கடுமையான அமிலத்தன்மை அல்லது பல உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
எனவே சர்ஜரி செய்ய நினைப்பவர்கள் குறைந்தது 2 வாரங்களுக்கு நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது.
குறைவான இரத்த சர்க்கரை
நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நெல்லிக்காயானது டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் நல்லதாக கருதப்பட்டாலும் இரத்த சர்க்கரை மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு நெல்லிக்காய் நல்லதல்ல.
எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிட நினைத்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின் உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்கள்
நெல்லிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
ஆனால் அந்த நெல்லிக்காயை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை வரவழைக்கும்.
இம்மாதிரியான பிரச்சனைகளை கர்ப்ப காலத்தில் பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே கர்ப்பிணிகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது என்று கூறுகிறார்கள்.
அப்படியே சாப்பிடுவதாக இருந்தால் மருத்துரின் ஆலோசனைக்கு பின் உட்கொள்ளுங்கள்.