உடல் எடையை குறைக்க இதை மட்டும் செய்தால் போதும்.
உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க யாருக்குதாங்க ஆசையில்ல? ஆனால் நம்ம நாக்கு விடுதில்லையே இப்படி தானே யோசிக்கிறீங்க கவலையை விடுங்க …
காலையில் எழுந்ததுமே நம்மில் பலருக்கு காபி, டீ குடிக்கும் பழக்கம் இருக்கும், ஆனால் இது தான் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
காலையில் முதலில் தேநீர் அல்லது காபி குடிப்பது வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதை அதிகரிக்கச் செய்யலாம், இதனால் செரிமானக் கோளாறுகளும் ஏற்படக்கூடும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகையான பானங்களுக்கு பதிலாக சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் உடல் எடையை வெகுவாக குறைப்பது மட்டுமன்றி உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.
காலையில் பருக சிறந்த பானங்கள்
காலையில் எழுந்தவுடன் முதலில் வெதுவெதுப்பான நீரை பருகுவது தொப்பையை குறைக்க மிகவும் உறுதுணையாக இருக்கும். இதில் அரைவாசி எலுமிச்சை சாறு மற்றும் தேனை சேர்துக்கொண்டால் மிகவும் நல்ல பலனை பெறமுடியும்.
ஒரு டம்ளர் கொதிநீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து இரவு முமுவதும் ஊறவைத்து அந்த நீரை காலையில் வடிகட்டி குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெறமுடியும்.
இவ்வாறு தொடர்சியாக செய்துவர உடல் எடை கணிசமாக குறைவதை உணர்வீர்கள். சீரகத்துக்கு பதிலாக வெந்தயத்தையும் உபயோகிக்கலாம், இதுவும் சிறந்த பலனை கொடுக்கும்.
இதை மட்டும் செய்தாலே போதும் உணவு விடயத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமலேயே உடல் எடையை குறைக்கலாம்.