ஃபேஷன்அழகு..அழகு..உறவுகள்புதியவைமருத்துவம்

Beard Growing Tips : இந்த 5 அறிகுறி இருந்தால், உங்களுக்கு தாடி வளராது… வீணா கண்ட ஆயில் வாங்குறேன்னு காசு வேஸ்ட் பண்ணாதீங்க!

சில ஆண்களுக்கு தாடி அடர்த்தியாக வளராமல் பூனைமுடி மாதிரி சின்ன சின்ன மெலிதான முடியாக வளரும். அடிக்கடி ஷேவிங் செய்தால் தாடி வேகமாக வளரும் என்று அடிக்கடி ஷேவ் செய்வார்கள். ஆனால் உண்மையில், ஷேவிங் செய்வது தோலுக்கு அடியில் உள்ள உங்கள் முடியின் தூண்டவோ முடி வளர்ச்சியையோ ஏற்படுத்தாது.

தாடி வளர்ச்சி

பொதுவான மெல்லிய தாடி இருப்பவர்களை விட அடர்த்தியான தாடியுடன் இருப்பவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக உற்பத்தி ஆகிறது என்று சொல்லப்படுகிறது. .

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி தாடி வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும், குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு உள்ளவர்களுக்கு மெலிதாகவே தாடி வளர்ச்சி இருக்கும். அடர்த்தியாக இருக்காது என்று சொல்லப்பபடுகிறது. தாடியின் முடி வளர்ச்சியைக் குறைக்கும் அறகுறிகள் இதோ…

​மரபியல் ரீதியான காரணங்கள்

தாடி அடர்த்தியாக வளர்வதற்கும் தாடி வளர்ச்சியின்மைக்கும் உங்களுடைய மரபணுக்கள் மிக முக்கியக் காரணமாக அமைகின்றன. உங்களுடைய பரம்பரையில் தாத்தா, அப்பா என யாருக்காவது அடர்த்தியான தாடி இருந்தால் உங்களுக்கும் அதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

உங்கள் உடலில் உள்ள 5-ஆல்ஃபா ரிடக்டேஸ் எனப்படும் என்சைம் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்ட்ரோஜன் ஹார்மோனை டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) எனப்படும் மற்றொரு ஹார்மோனாக மாற்றுகிறது.

ஒருவேளை உங்களுடைய பரம்பரையில் யாருக்கும் தாடி வளரவில்லை என்றால் உங்களுக்கும் தாடி முடி வளர வாய்ப்பில்லை. அதனால் உங்களுடைய மரபணுக்கள் அப்படியிருந்தால் நீங்கள் தேவையில்லாத முயற்சிகளை செய்வது வீண் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வயது (age factor)

தாடியில் இருக்கும் முடி உறுதியாகவும் அடர்த்தியாகவும் வளர்வதற்கு வயதும் மிக முக்கியமான ஒன்று.

ஆண்களில் பெரும்பாலும் 30 வயதுகளில் முகத்தில் முடி அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.

இதுவே 20 – 30 வயதுகளுக்குள் வளரும் முடி கொஞ்சம் மெலிதானதாக இருக்கலாம். வயதாகும்போது அதன் தடிமன் அதிகரிக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக முடியை தடிமனாக்குகிறேன் என்று காசு செலவழிக்காமல் இருப்பது நல்லது.

இனமும் தாடி வளர்ச்சியும் (Ethnicity)

இனம் என்றால் அது சாதி என்று பொருளல்ல. உலகம் முழுவதும் உள்ள மனித இனங்களை இது குறிக்கும். உலகில் உள்ள சில மனித இனங்களுக்கு தான் தாடி வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

உலக அளவில் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தான் மற்ற பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது அடர்த்தியான தாடி வளர்கிறதாம்.

அதேபோல சீன ஆண்களுக்கு காகசியன் பகுதி ஆண்களை விட குறைவாகவே தாடி வளர்ச்சி இருக்கிறதாம்.

.இதில் சீன ஆண்களுக்கு முகத்தில் வாய்ப்பகுதியைச் சுற்றி முடி குவிந்தபடி தாடி வளருமாம். அதே சமயம் காகசியன் ஆண்களுக்கு கன்னங்கள், கழுத்துப் பகுதிகளில் அதிகமாக முடி வளருமாம்…

அலோபீசியா அரேட்டா (Alopecia areata)

அலோபீசியா அரேட்டா என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நிலையாகும், அது உடலில் இருக்கும் மயிர்க்கால்களைத் தாக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த பிரச்சனை ஏற்பட்டால் தலையில் உள்ள முடி மற்றும் தாடியில் உள்ள முடிகள் திட்டுகளாக உதிரலாம்.

அலோபீசியா அரேட்டாவுக்கு குறிபிட்ட அளவில் எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் ஓரளவுக்கு பலனளிக்கும் கீழ்வரும் சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மினாக்ஸிடில் (ரோகெய்ன்),
டித்ரானோல் (டிரிதோ-ஸ்கால்ப்),
கார்டிகோஸ்டீராய்டு கிரீம்கள்,
நோயெதிர்ப்பு சிகிச்சை,
ஸ்டீராய்டு ஊசி,
கார்டிசோன் மாத்திரைகள்,
வாய்வழியே எடுத்துக் கொள்ளும் நோய்த்தடுப்பு மருந்துகள்,
போட்டோதெரபி,

​குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் (Low testosterone levels)

குறைந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகூட தாடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கான காரணங்களில் உள்றாக இருக்கலாம்.

மிகக் குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் உள்ளவர்களுக்கு முகத்தில் முடி வளர்வதில்லை

வேறு ஏதேனும் காரணங்களுக்காக டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மருத்துவ ரீதியாக குறைவாக இருந்தால், அது முடி வளர்ச்சியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பாலியல் ஆர்வமின்மை,
விறைப்புக் கோளாறு,
அதிக சோர்வு,
தசை வளர்ச்சி குறைவாக இருத்தல்,
உயர் கொலஸ்டிரால் பிரச்சினை,
மூட் ஸ்விங்
ஆகியவை டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதன் அறிகுறிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தாடி சரியாக வளர என்ன செய்யலாம்…

தாடி வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு விலையுயர்ந்த பல எண்ணெய்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை மட்டுமே வா்ஙகிப் பயன்படுத்துவது முழுமையான பலன்களைத் தராது. அதுதவிர கீழ்வரும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் பின்பற்றினால் ஓரளவு உங்களுக்கு பலனளிக்கும்.

தாடி வளர்ச்சியைத் தடுக்கும் மேற்கண்ட காரணங்கள் எதுவும் இல்லாதவர்களுக்கு,

ஆரோக்கியமான, சமச்சீரான நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தாடி வளர வேண்டுமென்றால் அது பொறுமையும் மிக அவசியம்.

மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். மன அழுத்தமும் உச்சந்தலையில் முடி உதிர்வதற்கு காரணமாக இருக்கும். அதனால் அவற்றைக் குறைக்க வேண்டும்.

போதுமான அளவு தூக்கம் அவசியம். நல்ல தூக்கம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker