முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா..?
தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் பல உணவுகளில் தவறாமல் இடம்பெறுவது கறிவேப்பிலை. அற்புத நறுமணம் கொண்ட இது, பால் ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு கூந்தல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
கறிவேப்பிலையில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள இந்த முக்கிய சத்துக்கள் நம் உச்சந்தலையின் Restoration process-ஐ பூஸ்ட் செய்வதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. தவிர கறிவேப்பிலை தலைமுடியின் இயற்கையான நிறமியை மீட்டெடுக்க உதவுகிறது. ஆனால் நம்மில் பலரும் கறிவேப்பிலை வழங்கும் பல அற்புத நன்மைகளை பற்றி தெரியாமல் அவற்றை சாப்பிடாமல் தட்டில் ஒதுக்கி வைத்து விடுகிறோம். உணவுகளுக்கு வாசம் தரும் கறிவேப்பிலை இறுதியில் குப்பைக்கு சென்று விடுகிறது. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான கிரண் குக்ரேஜா கறிவேப்பிலை மூலம் நம் கூந்தலுக்கு கிடைக்கும் மேலும் சில நன்மைகளை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். கறிவேப்பிலையை பயன்படுத்துவதால் நம் கூந்தலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள் இங்கே:
ஊட்டமளிக்கிறது – கறிவேப்பிலையில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ப்ரோட்டீன்ஸ் மற்றும் அமினோ ஆசிட்ஸ் உள்ளிட்டவை நம் Scalp-க்கு ஊட்டமளிக்கிறது. முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கவும், ஒட்டுமொத்த கூந்தல்ஆரோக்கியத்தை பராமரிக்கவும் ஆரோக்கியமான Scalp அவசியமானது.
முடி வளர்ச்சியை தூண்டுகிறது – கறிவேப்பிலையில் உள்ள முக்கிய சத்துக்கள் மயிர்க்கால்களை தூண்டி, முடி வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. மேலும் கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஏ-ஆக மாற்றப்படுகிறது.
வேர்களை ஸ்ட்ராங்காக்குகிறது – கறிவேப்பிலையில் அடங்கி இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் செலினியம் போன்ற மினரல்ஸ்கள் மயிர்க்கால் மற்றும் முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது. கூந்தலின் வேர்கள் வலுவாக இருந்தால் முடி உதிர்தல் மற்றும் முடி உடைவது உள்ளிட்ட கூந்தல் பிரச்சனைகள் குறையும்.
முன்கூட்டிய நரையை தடுக்கிறது – கறிவேப்பிலையில் உள்ள செலினியம், துத்தநாகம், அயோடின் மற்றும் இரும்பு போன்ற மினரல்ஸ் முடி நரைப்பதை தாமதப்படுத்துகின்றன. மேலும் கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் முடியின் ஏஜிங் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸிற்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை Neutralize-ஆக்குகின்றன.
சேதங்களை எதிர்த்து போராட உதவுகிறது – ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்து கொள்வது அல்லது மிகவும் மாசுபட்ட சுற்றுச்சூழலில் தொடர்ந்து இருப்பது என எதுவாக இருந்தாலும், இதன் பெரும்பாலான எதிர்மறை விளைவுகள் கூந்தல் ஆரோக்கியத்தில் எதிரொலிக்கிறது. மாசுக்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களின் எதிர்மறை விளைவுகளை எதிர்த்து போராடுவதில் கறிவேப்பிலை பெருமளவு உதவுகிறது. உங்கள் டயட்டில் தொடர்ந்து கறிவேப்பிலையை சேர்த்து வருவது தலைமுடி ஆரோக்கியமாக, இளமையாக மற்றும் வலுவாகவும் இருக்க உதவுகிறது