குழந்தைகளுக்குப் பிடித்த வெரைட்டியான பர்கர் வீட்டிலேயே செய்ய வேண்டுமா..? இதோ ரெசிபி ..!
பர்கர் என்றாலே குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டிஷ்களில் ஒன்றாக உள்ளதால் எப்போது கடைகளுக்குச் சென்றாலும் வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிக்கடி பீசா, பர்கர் போன்ற ரெசிபிகளைக் கடைகளில் சாப்பிடும் போது பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும். எனவே உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த ரெசிபிகளை வீட்டிலேயே ஈஸியா செய்து சாப்பிடலாம். இதோ எப்படி செய்யலாம்? என இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
பலாப்பழம் மற்றும் அவகோடா பர்கர் (Jackfruit and Avocado Burger):வெஜ், சிக்கன், முட்டை போன்ற பர்கர்கள் தான் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. வெரைட்டியாக பர்கர் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் பலாப்பழம் மற்றும் அவகோடா பர்கர் நல்ல தேர்வாக இருக்கும்.
தேவையானப் பொருட்கள்:-
கீரை
அவகேடோ
தக்காளி துண்டு
சீஸ்
எண்ணெய் – சிறிதளவு
வெண்ணெய்
கீரை
உப்பு மற்றும் மிளகுத்தூள்
செய்முறை:
இதை செய்வதற்கு முதலில், ஒரு பாத்திரத்தில் மசித்த கறி, பூண்டு விழுது, உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையை வடை போன்று தட்டி பொரித்து எடுக்க வேண்டும்.
பின்னர் பர்கர் பன்னை எடுத்துக் கொண்டு கிடைமட்டமாக வெட்டிக் கொள்ளவும். இதையடுத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும். இதையடுத்து பர்கர் ரொட்டியின் இருபுறமும் மயோனைஸ் தடவி, பர்கர் ரொட்டியில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் அடுக்கி, பாட்டியின் மேல் செடார் சீஸை வைக்கவும். இறுதியில் லேசாக நறுக்கிய வெங்காயத்தை வைத்தால் போதும் சுவையான பர்கர் ரெடி.