அழகு..அழகு..

நீண்ட நாள் அம்மை தழும்புகளையும் சீக்கிரமாக மறைய வைக்க இதை முகத்தில் தடவுங்க!

முகம் கருப்பாக இருக்கிறதோ அல்லது கலராக இருக்கிறதோ அனைவரும் விரும்புவது என்னவே மாசு மருக்கள் இல்லாத சருமத்தையே விரும்புகின்றனர். முகத்தின் அழகை முதலில் கெடுப்பது என்னவோ இந்த பருக்களாக தான் இருக்கும்.. அதன் பின்னர் இந்த பருக்கள் விட்டு சென்ற தழும்புகள் முகத்தில் நீங்காமல் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். இந்த பருக்கள் விட்டு சென்ற தழும்புகளை கூட எளிதாக நீக்கிவிடலாம். ஆனால் அம்மை விட்டு சென்ற தழும்புகளை நீக்குவது கடினம்..

ஒரு சிலருக்கு இந்த அம்மை தழும்புகள் பல ஆண்டுகளாக முகத்தை விட்டு நீங்காத வண்ணமாக இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த அம்மை தழும்புகளை நீக்குவது எப்படி என்று தெரியாமல் பலர் அது இருந்தால் இருந்து கொண்டு போகிறது என்று விட்டுவிடுவார்கள்.. ஆனால் சில இயற்கை பொருட்களை கொண்டு இந்த அம்மை தழும்புகளை விரைவாக நீக்கலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

கசகசா

சிறிதளவு கசகசா, சிறிய மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள். பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.

எலுமிச்சை

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

ஓட்ஸ்

டயட்டை கடைபிடிப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதில் பைபர் நிறைந்துள்ளது. ஓட்ஸ் அம்மை தழும்புகளை போக்குவதிலும் உதவுகிறது. ஒட்ஸை மிதமான சூடுள்ள நீரில் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டின் சூடு ஆறியதும் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பலகாரங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தில் பயன்படுத்துவதற்கும் சிறந்தது. இது முகத்தில் அரிப்பு உண்டாவதை தடுக்கிறது. இதனை கொண்டு முகத்தில் உள்ள தழும்புகளை எவ்வாறு நீக்குவது என காணலாம். இரண்டு டிஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இது பேஸ்டாக ஆகும் வரை நன்றாக கலந்து தழும்புகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். பின்னர் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் அம்மை தழும்புகளை போக்கவும் இதனை பயன்படுத்தலாம். இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதில் மினரல்கள் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் இருப்பதால் இது சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தேங்காய் தண்ணீரை தழும்புகள் உள்ள இடங்களில் தடவுங்கள். இல்லை என்றால் நீங்கள் முகம் கழுவ பயன்படுத்தும் தண்ணீரில் இதை கலந்து உபயோகப்படுத்துங்கள். தினமும் தேங்காய் தண்ணீர் குடிப்பதும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தேன்

தேனீக்களால் இயற்கையான முறையில் உருவாக்கப்படுவது தேன் ஆகும். இது சருமத்திற்கு பல விதங்களில் நன்மை தருகிறது. இது சருமத்திற்கு இயற்கையாகவே ஈரப்பதத்தை அளிக்கிறது. இது சருமத்தின் உள்ளே இருக்கும் ஆரோக்கியமான செல்களை வெளியே வர வைத்து தழும்புகளை போக்க உதவுகிறது. நீங்கள் தேன் மற்றும் ஒட்ஸ் இரண்டையும் கலந்து பயன்படுத்துவது சிறந்த பலனை தரும். தேன் மற்றும் ஓட்ஸ் கலந்த கலவையை அம்மை தழும்புகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும். பின்னர் தழும்புகள் உள்ள இடங்களில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். இதனை அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி

பப்பாளி பொதுவாக செரிமானத்திற்கு உதவுகிறது. இது அம்மை தழும்புகளை போக்கவும் உதவுகிறது. இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குவதன் மூலம் முகத்திற்கு ஜொலிப்பை கொடுத்து முகத்தை பிரகாசமாக்குகிறது. ஃபிரஷ் ஆன பப்பாளியுடன் கரும்பு சக்கரை மற்றும் பாலை நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து மிதமான சோப்பு போட்டு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

கற்றாளை

கற்றாளையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து முகத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. இதில் உள்ள அதீத மருத்துவ குணங்களால் இது தலைக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. கற்றாளையின் ஜெல்லை நன்றாக முகத்தில் அப்ளை செய்து அதனை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அது காயும் வரை விட்டு விட வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும். இந்த முறையை தினமும் மூன்று அல்லது இரண்டு முறைகள் தினமும் செய்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker