இந்த 6ல நீங்க யாரு? – வாங்கப் பார்த்திடலாம்!
அனைவருக்கும் ஒரே மாதிரியான நகத்தின் அமைப்பு, வடிவம் இருப்பது இல்லை. சிலருக்கு அகலமாக இருக்கும், சிலருக்கு குட்டையாக இருக்கும், சிலருக்கு சதுரமாக இருக்கும், சிலருக்கு கூர்மையாகவும் இருக்கும். இப்படி நகங்களின் வடிவங்களில் பல வகைகள் இருக்கின்றன.
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இது இயல்பு தானே என்கிறீர்களா? ஆனால், இதிலும் ஒரு ஆச்சரியம் உண்டு. ஆம்! ஒருவரின் நகத்தின் வடிவத்தை வைத்தும் அவரது குணாதிசயங்கள் குறித்து அறிய முடியுமாம்.
நைஜீரியாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் தான் கை ரேகை மற்றும் நகத்தின் வடிவத்தை வைத்து செய்த ஆராய்ச்சியின் முடிவில் இப்படி ஒரு பர்சனாலிட்டி டெஸ்ட் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சரி! வாங்க… உங்களுக்கு இது எத்தனை சதவிதம் ஒத்துப் போகுதுன்னு தெரிஞ்சுக்கலாம்…
முக்கோணம்!
உங்கள் நகம் இது போல முக்கோண வடிவத்தில் இருக்கிறதா? உங்களுக்கு தோல்வி என்றாலும், தோல்வி அடைவதும் என்றாலும் பிடிக்காது. எப்போதுமே பிரபலமாக, புகழுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும், நால்வர் மத்தியில் முதன்மையாக அறியப்படும் நபராகவும் இருக்க வேண்டும் என்று கருதுவீர்கள். உங்கள் மனநலம் மாறிக் கொண்டே இருக்கும். எப்போது எப்படி இருப்பீர்கள் என்று அனைவராலும் அறிந்துக் கொள்ள முடியாது. நீங்கள் மென்மையானவரும் கூட, சிறு, சிறு விஷயங்களில் எளிதில் மனம் உடைந்து போய்விடுவீர்கள்.
பாதாம்!
உங்கள் நகம் பாதாம் அல்லது வெண்ணெய் பழம் போன்ற வடிவத்தில் இருக்கிறதா? நீங்கள் இயல்பாகவே மென்மையான மனம் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பீர்கள். சீக்கிரம் புண்பட்டு போவீர்கள். சிறு வார்த்தை, சிறு செயலும் உங்களை புண்பட வைத்துவிடும். மற்றவர்களுக்கு உதவுவது, நட்பாக பழகுவது, அன்பு பரிமாறுதல், எந்த ஒரு விஷயத்தையும் மென்மையான வழியில் காண்பது, நடப்பது போன்றவை உங்கள் குணங்களாக இருக்கலாம்.
குட்டை!
உங்கள் நகத்தின் வடிவம் குட்டையானதாக இருக்கிறதா? நீங்கள் யாராலும் மாற்ற இயலாத பர்பெக்ட் ஆளாக இருக்கலாம். எதையும் பர்பெக்ட்டாக எதிர்பார்க்கும் உங்கள் குணத்தாலேயே நீங்கள் பயணிக்கும் பாதையில் பல கடுமைகள் காண்பீர்கள். உங்களிடம் பொறுமை இருக்காது, பொசுக்கு, பொசுக்கு என்று கோபம் வரும். அந்த வேலையாக இருந்தாலும் துரிதமாக யோசிக்கும் ஆற்றல் பெற்றிருப்பீர்கள். இவர்கள் தங்களிடமும் சரி, மற்றவரிடமும் அதிக செயற்திறன் எதிர்பார்ப்பார்கள்.
சிறிய சதுரம்!
உங்கள் நகம் சிறிய சதுரம் போன்ற வடிவத்தில் இருக்கிறதா? நீங்கள் சமயோசிதமாக எண்ணும் திறன் படைத்தவர், திறமைசாலி, எதற்கும் வளைந்துக் கொடுத்து போவீர்கள். கூர்மையான அறிவும், பார்வையும் இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் உடனே அதை கற்று அறிந்து துரிதமாக செயற்படுவீர்கள். உங்களிடம் பொறாமையும் இருக்கும், பேராசையும் இருக்கும்.
நீளமான, கூர்மையான!
உங்கள் நகத்தின் வடிவம் நீளமாகவும், கூர்மையாகவும் இருக்கிறதா? நீங்கள் ஆடம்பர வாழ்க்கை விரும்பும் நபராக இருக்கலாம். நீங்கள் எளிதாக எரிச்சல் அடையும் குணம் கொண்டிருக்கலாம். யாராக இருந்தாலும் தனக்கு முதல் மரியாதை அல்லது மதிப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் சற்று அதிகமாகவே இருக்கலாம். எதையும் கூட்டிக் கழித்து கணக்குப்போட்டு செய்யும் நபர்கள் இவர்கள். பொறாமை மற்றும் வாய்ப்பை தன்வசம் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருக்கும்.
நீளமான, அகலமான!
உங்கள் நகத்தின் வடிவம் நீளமாகவும், அகலாமானதாகவும் இருகிறதா? உங்களிடம் தலைமை பண்பு பிறப்பிலேயே காணப்படும். தாங்கள் கொடுக்கும் வாக்கிற்கு அதிக மதிப்பும், அதை சார்ந்த பெரும் கடமையும் கடைப்பிடிக்கும் நபர்களாக திகழ்வார்கள். செயலில் பொறுமை, கவனம், வீரியம் அனைத்தும் இருக்கும். சுதந்திரம், அமைதி, சமநிலை, திட்டமிட்டு செயற்படுவது என ஒரு சமநிலையான வாழ்க்கை வகுத்து வாழ்ந்து வருவார்கள். இவர்கள் எண்ணம் மற்றும் திட்டங்கள் பரந்த மனதுடன் இருக்கும்.