தேவையான பொருட்கள்:
* வெஜிடேபிள் – 3 கப் (பீட்ரூட், ப்ராக்கோலி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, கேரட்)
* பன்னீர் – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
மசாலாவிற்கு…
* முந்திரி – 10
* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கி குக்கரில் போட்டு, சிறிது நீரைத் தெளித்து அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, முந்திரி மற்றும் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, பாத்திரத்தை மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வெங்காயம், தக்காளி, முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி, கெட்டியாகி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள காய்கறிகளை நீருடன் சேர்த்து கிளறி, 8-10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதன் மேல் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், முந்திரி வெஜிடேபிள் குருமா தயார்.