வீடு-தோட்டம்

உங்க வீட்டு கண்ணாடி பல்லிளிக்குதா? இந்த ஐடியாவை ட்ரை பண்ணிப் பாருங்க!!

நாம் எந்த மேக்கப் போட்டாலும் ஒரு முறை கண்ணாடியை பார்க்கா விட்டால் நமக்கு தூக்கமே வராது அல்லவா. ஏனெனில் கண்ணாடி நம் முகத்தை அழகாக பிரதிபலிக்கிறது. அப்படிப்பட்ட கண்ணாடிகள் சீக்கிரமாகவே தூசி அடைந்து விடும்.

உங்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடியிலிருந்து எதைக் கொண்டு துடைத்தாலும் அதில் படிந்திருக்கும் அழுக்கு மட்டும் போகவே போகாது. நீங்களும் இருக்கிற பிராண்டேடு பொருட்களை எல்லாம் பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்காமல் சோர்ந்து போய் விடுவீர்கள்.

அதிலும் உங்கள் பாத்ரூம் கண்ணாடிகள் தண்ணீர், டூத் பேஸ்ட் மற்றும் சாம்பு, சோப்பு கரை இவற்றால் எளிதாக அழுக்கடைந்து விடும். இதை நீங்கள் என்ன தான் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு தேய்த்து கழுவினாலும் உங்களால் ஒன்னும் செய்ய இயலாது. இதனால் உங்கள் கண்ணாடியில் கீரல்கள் மற்றும் நிறம் மாறுமே தவிர புதிது போல் ஜொலிக்காது.



எனவே உங்கள் கண்ணாடிகளை புதிது போல் ஜொலிக்க வைக்க சரியான பொருள் தேவைப்படுகிறது.

எனவே உங்களுக்காக 6 அற்புதமான பொருட்களை கொண்டு உங்கள் கண்ணாடியை எளிதாக ஜொலிக்க வைக்க ஐடியாக்களை தர போகிறோம். இது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் ஆனால் இதற்கு கொஞ்சம் நேரமும் நீங்கள் செலவு பண்ண வேண்டும்.

சரி வாங்க அந்த 6 அற்புதமான பொருட்களை பார்க்கலாம்.

பேக்கிங் சோடா

உங்கள் கண்ணாடியை பளபளப்பாக மாற்ற பேக்கிங் சோடா மிகவும் பயன்படுகிறது. கொஞ்சம் பேக்கிங் சோடவை கண்ணாடியில் அழுக்கு உள்ள இடத்தில் தடவி துணியை கொண்டு தேய்க்க வேண்டும்.

பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைக்க வேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு துடைக்கவும். இறுதியில் ஒரு துண்டை கொண்டு துடைத்தால் ஜொலி ஜொலிக்கும் கண்ணாடியை பெறலாம்.

டிஸ்டில்டு வாட்டர்

நாம் சாதாரண மற்றும் வடிகட்டிய தண்ணீரை பயன்படுத்தும் போது அதில் மினரல்கள் இல்லாததால் உங்கள் கண்ணாடி அந்த அளவுக்கு சுத்தமாவதில்லை. எனவே இதற்கு பதிலாக டிஸ்டில்டு வாட்டரை பயன்படுத்தலாம். எப்பொழுதும் போல் க்ளீனரை டிஸ்டில்டு வாட்டருடன் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.



வினிகர்

மற்றொரு கண்ணாடி க்ளீனர் வொயிட் வினிகர் அல்லது டிஸ்டில்டு வினிகரை பயன்படுத்தலாம். இதற்கு வினிகரை தண்ணீருடன் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கண்ணாடியை துடைத்தால் கண்ணாடியில் தேங்கியுள்ள அழுக்கு, கறைகள் எல்லாம் போய் பளிச்சென்று மாறிவிடும்.

ஷேவிங் க்ரீம்

உங்கள் பாத்ரூம் கண்ணாடியை துடைப்பதற்கு இந்த முறை கண்டிப்பாக பலனளிக்கும். நீங்கள் குளிக்க போவதற்கு முன் ஷேவிங் க்ரீம் நுரையை உங்கள் கண்ணாடியில் தடவி விட்டு செல்லுங்கள். பிறகு மென்மையான துணியை கொண்டு துடைக்கவும்.இப்படி செய்தால் ஷேவிங் க்ரீம் ஒரு படலமாக செயல்பட்டு நீண்ட நாட்களுக்கு உங்கள் கண்ணாடி பளபளக்கும்.

இதே முறையை உங்கள் கார் கண்ணாடிகளுக்கும் பயன்படுத்தலாம்.

நியூஸ் பேப்பர்

இந்த முறை செலவு குறைந்த எளிதான முறையாகும். கொஞ்சம் நியூஸ் பேப்பர்களை கொண்டே உங்கள் கண்ணாடியை புதிதாக மாற்றி விடலாம். நியூஸ் பேப்பரை பந்து போல் சுருட்டி கொண்டு தண்ணீரில் முக்கி கண்ணாடியில் தேய்க்கவும்.

இதில் வினிகர் மற்றும் தண்ணீர் கலவை கூட பயன்படுத்தலாம். இதனால் செலவில்லாத புதிய கண்ணாடியை பெற முடியும். ஆனால் இதை செய்வதற்கு முன்னாடி பேப்பரின் தரத்தை சோதித்து கொள்ளவும். எதாவது மை கறை பட வாய்ப்புள்ளதா என்பதையும் பார்த்து கொள்ளவும்.



க்ளப் சோடா

க்ளப் சோடா செலவு இல்லாமல் எளிதாக கிடைக்கக்கூடியது. இந்த க்ளப் சோடவை கொண்டு எளிதாக கண்ணாடியை சுத்தம் செய்யலாம். க்ளப் சோடவை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கண்ணாடியில் தெளித்து துடைத்து விட்டால் போதும்.

இந்த ஐடியாக்களை பயன்படுத்தி உங்கள் வீட்டு கண்ணாடிகளை எப்பொழுதும் புதிது போல் வைத்திருங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker