Uncategorised
நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகளை குணமாக்கும் டீ
இந்த டீயை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும்
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதை – 100 கிராம், ஏலக்காய் – 2,
பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி – 2 டீஸ்பூன்,
பால் – அரை டம்ளர்.
செய்முறை :
தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடித்து கொள்ளவும்.
பாலை கொதிக்க வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து வரும் போது ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி பால், பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துப் பருகவும்.
இந்த டீயை பால் ஊற்றாமல் குடித்தால் மிகவும் நல்லது.