கால்களில் இருக்கிற வடுக்கள் மறையலயா? இதோ இந்த ஐஞ்சுல ஏதாவது ஒன்னு அப்ளை பண்ணுங்க…
உங்கள் கால்களில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை அகற்ற எளிமையான வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம். உடலில் பல பகுதிகளில் வடுக்கள் அல்லது கருமையான புள்ளிகள் நமக்கு ஏற்படுவதை பார்க்கலாம். இதில் நாம் வெட்கப்பட ஒன்றுமில்லை என்றாலும் நம்மில் பெரும்பாலோனோர் வடுக்களை விரும்புவதில்லை. நம் உடல் உபாதைகள் அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது முக்கியமாகும்.
மற்ற உடல் உறுப்புகளோடு கால்களை ஒப்பிடும்போது அவர் வெயில், ஹைப்பர் பிக்மேண்டேஷன், உட்புற முடி, தடிப்புகள் மற்றும் பல சிக்கல்களை இவை சமாளிக்கின்றன. சாதரணமாக உடலின் மேல் பாகங்களை அழகுப்படுத்துவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் கால்களை நாம் கண்டுக்கொள்வதில்லை. ஷார்ட்ஸ் அல்லது தொடை தெரிவது போன்ற ஆடைகளை அணிய திட்டமிடும்போது மட்டுமே நாம் கால்களை கவனிக்கிறோம். அப்போது கால்கள் அப்படி இருக்க கூடாது என நாம் நினைக்கிறோம். எனவே சில எளிய வீட்டு வைத்தியங்களை செய்வதன் மூலம் கால்களை சரி செய்ய முடியும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரானது உடலுக்கு குறிப்பாக பருமனாக இருப்பவர்களுக்கு அற்புதமான சில நன்மைகளை செய்கின்றன. இது சிறந்த ப்ளீச்சிங் சக்திகளை கொண்டுள்ளது. தோல் பிரச்சனை, ஹைப்பர் பிக்மெண்டேஷன் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுப்பட இது சருமத்திற்கு உதவுகிறது. இருப்பினும் இந்த வினிகரை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். சாதரண அல்லது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் பாதிப்பை தவிர்க்க செறிவூட்டப்பட்ட வடிவத்தில் இதை பயன்படுத்தக்கூடாது.
முதலில் 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து 6 தேக்கரண்டி தண்ணீரில் கலந்துக் கொள்ளவும். இது ஆப்பிள் வினிகரை நீர்த்து போக செய்ய உதவும்.
ஒரு சிறிய காட்டன் துணியை பயன்படுத்தி அதில் வினிகரை தொட்டு உங்கள் கால்களில் உள்ள அனைத்து புள்ளிகள் மற்றும் வடுக்களில் இதை தடவவும்.
இந்த செயல்முறையை தினமும் மேற்கொள்ளவும். அதற்கு பிறகு தோலுக்கு ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்துங்கள்.
சர்க்கரை ஸ்க்ரப்
பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பல்வேறு அழகு நோக்கங்களுக்காக சர்க்கரை ஸ்கரப்பை பயன்படுத்துகின்றனர். சீரான தன்மையை பொறுத்து தேவையற்ற உடல் முடி, கருமையான முடிகள் மற்றும் இறந்த செல்களை அகற்றுவதற்கு இந்த சர்க்கரை ஸ்கர்ப் உதவியாக இருக்கிறது.
இந்த சர்க்கரை ஸ்கரப்பில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இது ஒரு இயற்கையான ஹியூமெக்டண்ட் ஆகும். இதனால் தோல் ஈரபதத்தை கொண்டுள்ளது மற்றும் இதனால் தோல் நீரேற்றமாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமம் இருக்கிறது எனில் நீங்கள் பயன்படுத்த ஏதுவான தீர்வாக சர்க்கரை ஸ்கரப் இருக்கும்.
2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள் இரண்டையும் நன்றாக கலக்கவும்.
பிறகு அவற்றை உங்கள் கால்களில் வடு உள்ள இடங்களில் மெதுவாக தேய்க்கவும். இதை மென்மையாக செய்யவும்.
பிறகு கால்களை சாதரண நீரில் கழுவவும். ஒவ்வொரு நாளும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
முள்ளங்கி
முள்ளங்கி குறைவான அளவில் பிரபலமான ஒரு தாவரமாக முள்ளங்கி உள்ளது. ஆனால் இது உங்கள் சருமத்திற்கு அற்புதமான மூல பொருளாக இருக்கும். இது தோல் ஒளிரும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் கறைகள் பிளாக்ஹெட்ஸ் மற்றும் முகப்பரு ஆகியவற்றை கையாள்வதில் இது பயனுள்ளதாக இருக்கும். இதை பின்பற்றுவதிலும் பெரிதாக சிரமம் இருக்காது.
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் குறைவான அளவில் முள்ளங்கியை அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் கால் கப் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து வைக்கவும்.
இந்த கலவை ஒரு இரண்டு வாரங்கள் அப்படியே இருக்கட்டும். அந்த கலவையை எப்போதாவது குலுக்கி மட்டும் வைக்கவும்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த கலவையை வடிக்கட்டி கரைசலை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
உடலில் உள்ள புள்ளிகளின் மேல் ஒவ்வொரு நாளும் இந்த கலவையை தடவவும்.
எலுமிச்சை
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்க கூடிய ஒரு பழமாக எலுமிச்சை உள்ளது. ஏனெனில் எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த உணவுப்பொருளாக உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் தோல் பாதிப்பு மற்றும் முன்கூட்டியே தோலில் ஏற்படும் சுருக்கங்கள் போன்றவற்றை குறைக்க உதவுகின்றன. எனவே இதை கொண்டு காலின் கருமையான இடங்கள் மற்றும் வடுக்களை சரி செய்ய முடியும்.
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் எலுமிச்சையின் சாற்றை பிழிந்துக் கொள்ளவும்.
ஒரு பருத்தி துணியை பந்து போல ஆக்கி கொள்ளவும். அதை கொண்டு எலுமிச்சை சாற்றை உடலில் கருமையான இடங்கள் மற்றும் வடுக்கள் உள்ள பகுதிகளில் எலுமிச்சை சாற்றை தேய்க்கவும்.
வெள்ளரி
உடலுக்கு அதிக நீரேற்றத்தை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களில் ஒன்றான வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களை ஏற்படுத்தலாம். கருமையான இடங்கள் மற்றும் வடுக்களை சரி செய்வதில் இவை நன்மை பயக்க கூடிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல வைட்டமின்களை கொண்டுள்ளன. இவற்றை கொண்டு கருப்பு நிறத்தை மெதுவாக அகற்றலாம்.
முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவ வேண்டும். பிறகு அதை அரைத்து பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டரை சேர்க்கவும். இப்போது இந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேர்க்கவும். பின்னர் சாதாரண நீரில் அவற்றை கழுவவும்.