அழகு..அழகு..புதியவை

ஆசை ஆசையாக வைக்கும் நெயில் பாலிஷ் உடனே உறிந்துவிடுகிறதா..? நீண்ட நாட்கள் இருக்க சூப்பர் டிப்ஸ்

சிலருக்கு நெய்ல் பாலிஷ் போட்டுக்கொண்ட சில மணி நேரங்களிலேயே உதிரலாம். இதற்கு கைகளை தொடர்ந்து கழுவுதல் அல்லது சமயலறையில் வேலை செய்தல், பாத்திரங்களை கழுவுதல் போன்ற வீட்டு வேலைகள் காரணமாக இருக்கலாம்.

இன்றைய நவ நாகரீக உலகில் பெண்களுக்கான ஒப்பனை பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. பெண்கள் தங்கள் முக அழகை எந்த அளவுக்கு பாதுகாக்கிறார்களோ, அதேபோல அழகான மற்றும் வண்ணமயமான நகங்களை நேசிக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும், மேட் நகங்கள் முதல் கிளாசிக் பிரஞ்சு நகங்கள் என இன்னும் பலவிதமான நகங்களை நெய்ல் ஆர்ட் நிறுவனங்கள் வகைப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் உதவியுடன் பெண்கள் தங்கள் கை விரல்களை அழகாக காட்டுவதற்கு நெய்ல் பாலிஷ் பயன்படுத்துகின்றனர்.

அது மிகவும் சிம்பிளாக இருந்தாலும் நெய்ல் பாலிஷ் போட்டுக்கொண்ட ஒரு சில நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் துவங்கும். சிலருக்கு நெய்ல் பாலிஷ் போட்டுக்கொண்ட சில மணி நேரங்களிலேயே உதிரலாம். இதற்கு கைகளை தொடர்ந்து கழுவுதல் அல்லது சமயலறையில் வேலை செய்தல், பாத்திரங்களை கழுவுதல் போன்ற வீட்டு வேலைகள் காரணமாக இருக்கலாம். எனவே, உங்கள் நெயில் பாலிஷ் நகங்களில் இருந்து உதிராமல் அப்படியே இருப்பதை உறுதிசெய்ய கீழ்காணும் உதவிக்குறிப்புகளை பின்பற்றினால் போதும், நீண்ட நாட்களுக்கு உங்கள் விரலில் நெய்ல் பாலிஷ் அப்படியே இருக்கும்.

எப்போதும் ஒரு டாப் கோட் பயன்படுத்துங்கள் : இது உங்கள் வண்ணமயமான விரல்களை நீண்ட நாட்களுக்கு அப்படியே பாதுகாப்பதில் உதவி புரிகிறது. நெய்ல் பாலிஷ் மீது பொருந்தக்கூடிய டாப் கோட்டை பயன்படுத்துவது அவசியம். வழக்கமாக நீங்கள் உங்களுக்கு பிடித்த நெய்ல் கலரை தேர்ந்தெடுத்து அதனை உங்கள் நகங்களில் பூசிய பிறகு அதனை நன்கு காய வையுங்கள். வண்ணப்பூச்சு காய்ந்தபின் அதன் மேல் டாப்கோட் போடுவது நீண்ட நேரம் நீடிக்க உதவும் மற்றும் உங்கள் நகங்களுக்கு பளபளப்பான ஷைனிங்கை கொடுக்கும். எந்தவொரு வகை நெயில் பாலிஷுடனும் சேரக்கூடிய டாப் கோட்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஹாண்ட் கிரீம் பயன்படுத்துங்கள்: ஹாண்ட் கிரீம்கள் அடிப்படையில் சன்ஸ்கிரீன் போல வேலை செய்கின்றன. ஹாண்ட் கிரீம்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்துவது உங்கள் கைகளை ஈரப்பதமாகவும், நகங்களை ஆடம்பரமாகவும் வைத்திருக்க உதவும். இது உங்கள் நகத்தின் ஓரப் பகுதிகளை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் அவை உங்கள் சருமத்தை உலர்த்துவதற்கும், கூடுதலாக வளர்ந்த நகங்களை ஷேப் செய்வதற்கும் எளிதாக இருக்கும்.

நகங்களின் நுனி வரை நன்றாக பாலிஷ் செய்யுங்கள்: நீங்கள் உங்கள் விரல் நகங்களில் பாலிஷ் வைக்கும் போது அனைத்து ஓரங்கள் மற்றும் நுனி வரை நன்றாக கோட் செய்யுங்கள். ஒரு முறைக்கு இருமுறை நன்கு கோட் செய்வதால் பாலிஷிகள் எளிதில் உதிராது.

ஒரு பேஸ் கோட்டைப் பயன்படுத்துங்கள்: நீங்கள் உங்கள் நகங்களுக்கு எப்படி ஒரு டாப் கோட்டை பயன்படுத்துகிறீர்களா அதை போலவே பேஸ் கோட்டையும் பயன்படுத்துவது முக்கியம். நெய்ல் பாலிஷ் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பேஸ் கோட்டைப் பயன்படுத்துவது, உங்கள் நகங்களில் நீண்ட நேரத்திற்கு பாலிஷ் ஒட்டிக்கொள்ள உதவி புரியும். இது உங்கள் நகங்களை நீண்ட காலமாக அழகாகவும் ஷைனிங்காகவும் தோற்றமளிக்க உதவுகிறது.

ரப்பர் கையுறைகளை அணியுங்கள்: நீங்கள் தினசரி வீட்டு வேலைகளைச் செய்பவராக இருந்தால், உங்கள் நகங்களைப் பாதுகாக்க ரப்பர் கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள். பாத்திரங்களை கழுவும் போது நீரின் தொடர்ச்சியான ஓட்டம் மற்றும் சோப்பின் பயன்பாடு ஆகியவை உங்கள் நகங்களிலிருந்து வண்ணப்பூச்சுகளை உதிரச் செய்கிறது. அதுவே ரப்பர் கையுறைகளை அணியும் போது உங்கள் நகங்கள் பாதிக்கப்படாமல் நீண்ட நேரம் பாலிஷ் அப்படியே இருப்பதை உறுதி செய்ய முடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker