மொறுமொறுப்பான… தேங்காய் தட்டை
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு – 2 கப்
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* துருவிய தேங்காய் – 1 கப்
* வரமிளகாய் – 2
* மல்லி விதைகள் – 2 டீபூன்
* ஓமம் – 1/4 டீபூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மல்லி விதைகள், ஓமம், வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு பெரிய பௌலில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.
* பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கையில் எண்ணெய் தடவி, அந்த உருண்டையை தட்டையாக தட்டி, எண்ணெய் போட்டு பொன்னிறிமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், தேங்காய் தட்டை தயார்.