அழகு..அழகு..புதியவை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

கண் இமைகளை அடர்த்தியாக வைத்துக் கொள்வது என்பது உங்களது கண்களை மட்டுமல்லாமல், உங்களது முகத்திற்கும் கூடுதலான அழகினை கொடுக்கும். இந்த கண் இமைகள் குறைவாக இருப்பது என்பது பலருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாக உள்ளது.

அதிகமான இமைகளை கொண்டவர்களின் கண்கள் பட்டாம்பூச்சியை போல சிறகடிக்கும்.. சிலர் செயற்கையான கண் இமைகளை வாங்கி பல வண்ணங்களில் பொருத்திக் கொள்வார்கள்.. ஆனால் பலருக்கும் இது போன்ற ஒப்பனை அழகு என்பது பிடிக்காத ஒன்றாக இருக்கும். இது போன்று இருப்பவர்களுக்காக தான் இந்த பகுதியில் இயற்கையான முறையிலேயே எப்படி அடந்தியான இமைகளை பெறலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

விட்டமின் E

விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சியில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும் இந்த மருந்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் கண் இமை முடியின் அடர்த்தியை இரு மடங்கு வலுவாக்குகிறது.

ஆலிவ் ஆயில்

ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்து நன்றாக கலந்து, அதை தினமும் இரவில் கண் இமை முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதில் உள்ள இயற்கையான உயர் கொழுப்பு அமிலங்கள் கண் இமை முடியை வலுவாக்கி நன்கு வளரச் செய்கிறது.

பெட்ரோலியம் ஜெல்லி

சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும். இதனால் நன்கு அடர்த்தியான கண் இமை முடிகள் கிடைக்கும்.

மசாஜ்

தினமும் சாதரணமாக கண் இமைகளை மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே நம்முடைய விரல்களில் ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.

விளக்கெண்ணை

விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து, தினமும் இரவில் சில துளிகளை எடுத்து கண் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.

ஒப்பனையை நீக்கவும்

ஒப்பனை கண்களில் சுற்றி இருக்கும் மிக மெல்லிய தோலினை திணற வைக்கிறது. மேலும் மஸ்காரா கண் இமைகளின் மீது மிகவும் கனமாக உள்ளது. இரவு அதை நீக்கும் போது உங்கள் இமைகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. அவை இரண்டும் சமமாக மென்மையானதாக உங்கள் தோல் மற்றும் கண்ணுக்கு இது பொருந்தும்.

கண் இமைகள்

நீங்கள் உங்கள் கண் ஒப்பனையை நீக்கும் போது, மிகவும் மென்மையாக‌ இருக்கும். நீங்கள் உங்கள் இமைகள் கடினமாக‌ இருந்தால், அவை சிதறியுள்ள முடி மற்றும் அவற்றை ஆரோக்கியமானதாக‌ மீண்டும் வளர செய்ய முடியாது. உங்கள் கண் இமைகள் வளருவதற்கு உங்கள் முடி வளருவதை விட நீண்ட நாட்கள் ஆகும் மேலும் ஏற்கனவே இருக்கும் கண் இமைகளை சேதப்படுத்த வேண்டாம்.

புரோட்டின் உணவுகள்

நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப் பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோட்டீன் உணவை உண்ண வேண்டும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker