உங்கள் துணையை தினமும் கட்டிப்பிடிக்கிறீர்களா..? அதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
துணையை மட்டுமல்ல நண்பனை, தோழியை, அம்மாவை , அப்பாவை என பிடித்த நபர்களை கட்டிப் பிடிக்கும் போது அது மனதுற்கு ஒருவித ஆறுதலை அளிக்கும். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் மனம் இலகுவாகும். இதுமட்டுமல்ல கட்டிப்பிடிக்கும்போது உடலில் உங்களுக்கே தெரியாமல் இன்னும் பல நன்மைகள் நிகழ்கின்றன. அவை என்னென்ன பார்க்கலாம்.
மன அழுத்தம் நீங்கும் : முன்பே சொன்னதுபோல் மனதில் கனத்த கவலைகள் இருந்தாலும் நம் நம்பிக்கைக்குரிய நபரைக் கட்டிப்பிடிக்கும் போது மனதில் ஒருவித அமைதி தோன்றும். நாம் தனியாக இல்லை. நம்முடன் துணை நிற்க ஆள் உண்டு என்ற நம்பிக்கை பிறக்கும். இதனால் மன அழுத்தம் குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது, மார்பக எலும்பு மீது அழுத்தம் செலுத்தப்படுகிறது. இது ஒரு வித உணர்ச்சியை உருவாக்குகிறது. இது உடலின் பின்னல் அமைப்பு போன்ற நரம்புச் சக்கரங்களை செயல்படுத்துகிறது. இந்த செயல் தைமஸ் சுரப்பிகளுக்கு உதவுகிறது. இந்த சுரப்பி உடலில் வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
கலோரி குறையும் : இது உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கலாம். அதாவது உங்கள் அன்புக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பதால் 12 கலோரிகளை எரிக்க முடியும் என ஆய்வு கூறுகிறது. எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது, கலோரிகளை குறைக்கிறீர்கள்.
தசைகளின் இறுக்கத்தை தளர்த்தும் : அன்பு நிறைந்த அணைப்பு வலியை எதிர்த்துப் போராட உந்துதலாக இருக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடலில் பதற்றத்தை நீக்கி மென்மையான திசுக்களில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது பதட்டமான தசைகளை தளர்த்த உதவுகிறது.
மூளைக்கு சுருசுருப்பு தரும் : நீங்கள் நேசிப்பவரை கட்டிப்பிடிக்கும்போது ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் இரத்த ஓட்டத்தில் சுரக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இது மட்டுமல்லாமல், நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது, இதனால் மூளையில் சுறுசுறுப்புக்கும் அமைதிக்கும் இடையில் ஒரு நல்ல சமநிலையை ஏற்படுத்த உதவுகிறது.
மன அமைதி : நெருக்கிய உறவைக் கட்டி அணைக்கும்போது எதிர்மறை சிந்தனைகளை சுரக்கும் கார்டிசோல் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம், கவலைகள் மறந்து நம்பிக்கை பிறக்கிறது.