இன்றைக்கே உங்கள் முன்னாள் காதலன்/ காதலியை ஃபிரெண்ட் லிஸ்டிலிருந்து பிளாக் செய்ய போதுமான காரணங்கள்…
ஆரோக்கியமான உறவாக இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் அது உங்கள் நிம்மதியை குலைப்பாதாக இருந்தால் அந்த உறவை உடனே கைவிடுவதுதான் நல்லது.
இந்த லாக்டவுனில் பலரும் முன்னாள் காதலன், காதலியை தொடர்பு கொண்டு பேசியதாக ஆய்வுகள் பல வந்தன. அவ்வாறு நீங்களும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் எனில் அது ஆரோக்கியமான உறவாக இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் அது உங்கள் நிம்மதியை குலைப்பாதாக இருந்தால் அந்த உறவை உடனே கைவிடுவதுதான் நல்லது. அந்த வகையில் உங்கள் முன்னாள் காதலன்/காதலியை மீண்டும் பிளாக் செய்ய என்னென்ன பொதுவான காரணங்கள் போதுமானது என்று பார்க்கலாம்.
ஏமாற்றுதல் : உறவில் ஏமாற்றுதல் மிகவும் தவறான விஷயம். அதை அவர் செய்கிறார் எனில் அல்லது செய்கிறாரோ என சந்தேகம் எழுந்தாலே பிளாக் செய்துவிடுவது நல்லது.
மீண்டும் சேர நினைத்தல் : பழைய காதலை மீண்டும் மலரச் செய்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அதைப் பற்றி அடிக்கடி பேசி உங்களை தொந்தரவு செய்கிறார். பழைய நினைவுகளை அடிக்கடி கிளறுகிறார் எனில் பிளாக் செய்வது நல்லது. உங்கள் நிம்மதிக்கு தடையாக இருந்தால் யோசிக்காமல் பிளாக் செய்வது நல்லது.
குற்ற உணர்ச்சி : அவரின் சில செயல்கள் உங்களுக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கினால் அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதால் அவர் இருக்கிறாரே என குற்ற உணர்ச்சி உண்டானால் பிளாக் செய்வதில் தவறில்லை.
நெருங்குதல் : தினமும் அவருடைய போஸ்ட் மற்றும் ஸ்டேட்டஸுகளுடன் விழித்தல், சமூகவலைதளம் பக்கம் சென்றாலே அவருடைய போஸ்ட் மற்றும் புகைப்படங்கள்தான் வருகின்றன. அது உங்கள் மனதை கடுமையாக பாதிக்கிறது, மன நிம்மதியை கெடுக்கிறது எனில் பிளாக் செய்துவிடுவது நல்லது.