இந்த பொருளை ஐஸ்கட்டியாக்கி கண்ணுக்கு பயன்படுத்தினா எப்பவுமே கருவளையம் வராது!
கண்ணுக்கு கொடுக்கும் அதிகபடியான வேலையை தாண்டி போதுமான சத்து இல்லாததாலும் கருவளையம் அதிகரிக்கிறது.கருவளையம் அவ்வபோது வருவதும் மறைவதுமாக இருந்த காலம் எல்லாம் இப்போது இல்லை எப்போதும் நீங்காமல் பின் தொடர்கிறது.
கருவளையம் வயது பேதமில்லாமல் இன்று சிறுவயதினரையும் தாக்கிவருகிறது. மன அழுத்தம், சத்து குறைபாடு, பரம்பரை தாண்டி அதிக பளு கொடுப்பதாலும் கண்கள் வலிவிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் கருவளையமும் சேர்ந்துவிடும்.
இவையெல்லாம் தற்காலிகமாக இருந்தாலும் உரிய பராமரிப்பு இல்லாவிட்டல் தொடர்ந்து கண்களை சுற்றி படிந்துவிடுவதோடு கருமையையும் உண்டாக்கிவிடுகிறது. கண்களுக்கு கீழ் உண்டாகும் இந்த கருமையையும், இரப்பை வீக்கத்துக்கும் எளிதான பராமரிப்பு செய்தாலே அதை எளிதில் நீக்கமுடியும். ஐஸ்கட்டி கொண்டு செய்யும் ஒத்தடம் கண்களுக்கு புத்துணர்ச்சியையும் அழகையும் கொடுக்கும். வசீகரமான கண்களுக்கு உதவும் இந்த பொருள்களை குறித்து தெரிந்துகொள்வோம்.
கேரட்
கேரட் உடல் ஆரோக்கியத்தை அளிக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ட், பொட்டாசியம்,பீட்டா கரோட்டின், ஊட்ட சத்துகள் கொண்டிருக்கிறது. அதே போன்று இவை சருமத்துக்கும் பெரிதும் உதவுகிறது. முகம் இழந்த நிறத்தை மீட்டெடுப்பது முதல் முகத்தின் சுருக்கம் போக்கும் கேரட் கண்களின் கருவளையத்தையும் ஆரோக்கியமாக போக்குகிறது.
கேரட்டை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு வடிகட்டி எடுக்கவும். அதிகம் நீர் விட வேண்டாம். இதை ஐஸ் க்யூபில் ஊற்றி வைத்து ஐஸ்க்யூபாக மாறும் வரை வைத்திருந்து எடுத்து மெல்லிய துணி அல்லது அப்படியே கண்களை மூடி ஒற்றி எடுக்கவும். நான்கு நாளில் பலன் தெரியும். கண்களில் வசீகரம் கூடும்.