வழுக்கைத்தலையை குணமாக்க செய்யப்பட்ட பண்டையகால சிகிச்சைகள்… இதுக்கு சொட்டையாவே இருந்திரலாம்…!
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் அது முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்தான். மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதீத முடி உதிர்வு, இளம்வயதில் நரை மற்றும் வழுக்கைத்தலை என பல பிரச்சினைகளை இளம் வயதிலேயே ஆண்கள் எதிர்கொள்கின்றனர்.
இதனால் பல ஆண்களின் திருமணம் தடைபடுகிறது இதற்காக பயந்தே பலரும் விரைவில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த முடி உதிர்வு மற்றும் வழுக்கைத்தலை பிரச்சினைகள் ஆண்களுக்கு புதிதல்ல. உலகம் உருவான காலம் முதலே இந்த பிரச்சினைகள் உள்ளது.ஆனால் இப்போது அதனை எதிர்கொள்ளும் வயதுதான் குறைந்து விட்டது. இதற்காக பல சிகிச்சை முறைகள் இப்போதிருக்கும் காலக்கட்டத்தில் பண்டைய காலங்களில் இதற்காக என்ன சிகிச்சை கொடுத்திருப்பார்கள் என்று சிந்தித்து உள்ளீர்களா? இந்த பதிவில் இந்த கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.
பண்டைய எகிப்திய வைத்தியம் 1550 பி.சி.க்கு முந்தைய மருத்துவ குறிப்புகள் எபர்ஸ் பாப்பிரஸ், முடி உதிர்தலால் பாதிக்கப்பட்ட பண்டைய எகிப்தியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல சிகிச்சைகளை வழங்குகிறது. இந்த சிகிச்சையில் நீர்யானை, முதலை, டோம்காட், பாம்பு மற்றும் ஐபெக்ஸ் ஆகியவற்றிலிருந்து கொழுப்புகளின் கலவை அடங்கும். முள்ளம்பன்றி முடி தண்ணீரில் வேகவைக்கப்பட்டு உச்சந்தலையில் நான்கு நாட்கள் பூசப்படும், பின்னர் ஒரு வேட்டைநாயின் கால் கழுதையின் பாதத்துடன் எண்ணெயில் வதக்கப்படும். இந்த எண்ணெய் தலையில் தேய்க்கப்பட்டது. பண்டைய எகிப்தில் அரச குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விக் மற்றும் போலி தாடிகளை பயன்படுத்தினர்.