குழந்தைகளுக்கு வரும் மூட்டு வலி
அந்த காலத்தில் 80 வயது ஆனவுடன் தான், வயதாகிவிட்டது, மூட்டுக்கள் தேய்ந்து விட்டது, மூட்டுவலி உள்ளது, உட்கார முடியவில்லை, உட்கார்ந்தால் எழ முடிய வில்லை என்று கூறுவார்கள். ஆனால் இன்று 8 வயதிலேயே மூட்டுவலி உள்ளது என்று சிறியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனைகள் செய்து அறுவை சிகிச்சை வரை செய்யும் அவல நிலையைக் காண்கிறோம்.
உடலில் உள்ள எந்த ஒரு மூட்டிலும் ஏற்படுவது மூட்டுவலி. நாம் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படுகின்ற வலியை தான் மூட்டுவலி என்று கூறுகிறோம். நமது உடலில் உள்ள அசையும் மூட்டுக்களில் மிகப் பெரியது முழங்கால் மூட்டு.
முதலில் மூட்டு வலியின் வகையை பற்றி தெரிந்து கொள்வோம்.
1) குழந்தைகளுக்கு வரும் மூட்டு வலி. இதில் ரிக்கட்ஸ் நோய், போலியோ இருவகை உள்ளது.
ரிக்கட்ஸ் மூட்டுவலி:- ரிக் கட்ஸ் வரக் காரணம் மனித உடலுக்குத் தேவை யான சூரிய வெளிச் சம் கிடைக்காதது தான். இன்று எல்லாக் குடும் பங்களும் பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்ஸ்சில் சொகு சாக குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். அலுவலகம் செல்ல, குழந்தைகளைப் பள்ளிக்கு கூட்டி செல்ல ஏ.சி கார். படிக்கும் பள்ளிகளிலும் இன்று ஏ.சி வந்து விட்டது.
சிறு குழந்தைகளுக்கு பேண்ட், சர்ட், ஷூ, டை, இறுக்கமான உடை, வீட்டிற்குள்ளும் சூரிய வெளிச்ச கதிர் படுவதில்லை. வெளியிலும்படுவதில்லை. ல்போனும், இன்டர்நெட்டும் பார்க்ககூட நேரமில்லை, இதில் சூரியனை யார் பார்ப்பது என்ற நிலையில் வாழ்வதால் குழந்தைகளின் மூட்டுக்களில் சூரிய ஒளி படாததால் மூட்டில் உள்ள சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி படலம் ஒழுங்காக சுரக்காமல் சிறுவர்களுக்கு மூட்டுவலி வருகின்றது. மேலும் உடலுக்குத் தேவையான கால்சியம் பற்றாக்குறை, வைட்டமின்–டி பற்றாக்குறையால் ரிக்கட்ஸ் என்ற மூட்டுவலி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.
இந்த மூட்டுவலி வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்;
பசியின்மை, உடல் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், உடலில் வலி, வீக்கம் ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.
போலியோ:- போலியோ வைரஸ் என்ற கிருமி தாக்குவதால் முதுகுத்தண்டிலுள்ள நரம்புகளை பாதிக்கச் செய்கின்றது. அதனால் கைகள், கால்கள் வலுவிழந்து விடுகின்றது, மூட்டு வலி வருகின்றது.
ஏற்படும். குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த விதமான அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அடுத்து மூட்டுவலி வரப்போகின்றது என்று அர்த்தம்.