உறவுகள்சமையல் குறிப்புகள்
மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!
பிரியாணியில் மொகல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாதி பிரியாணி , லக்னோ பிரியாணி என்று பல வகைகள் இருப்பது போல அதன் உற்ற துணையான தாழ்ச்சாவிலும் பல வகைகள் உண்டு,அதில் ஒன்று இது.
தேவையான பொருட்கள்.
- ஆட்டு,எலும்பும் கொழுப்பும் 1 கிலோ
- பெரிய வெங்காயம் 5
- தக்காளி 5
- வாழைக்காய் 2
- மாங்காய் 1
- முருங்கைக்காய் 4
- கத்தரிக்காய் ¼ கிலோ
- துவரம் பருப்பு 100 கிராம்
- பாசிப் பருப்பு 50 கிராம்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- எலுமிச்சம் பழம் அளவு புளி
எப்படிச் செய்வது
- முதலில் பருப்புகள் இரண்டையும் கழுவி மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து எடுத்து வையுங்கள்.அடுப்பில் தகுந்த பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளியுங்கள்.அதில் வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை பொடியாகவும் வெட்டிப் போட்டு உப்புச் சேர்த்து வதக்குங்கள்
- . அவை வதங்கியதும் முதகில் கழுவி வைத்திருக்கும்,ஆட்டு எலும்பு மற்றும் கொழுப்பை சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள்,அதன் பிறகு
முருங்கைக்காய் , கத்தரிக்காய் இரண்டையும் போட்டு அத்துடன் மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்தூள் சேர்த்து ஒரு முறை புரட்டிவிட்டு தண்ணீர் விட்டு மூடிவைத்து பத்து நிமிடம் வேக விடுங்கள். - அதற்குப்பிறகு மூடியைத் திறந்து வாழைக்காய்,மாங்காய் துண்டுகளைப் போட்டு மூடி மேலும் பத்து நிமிடம் வேகவிடுங்கள்.அதன் பிறகு வேகவைத்து வைத்திருக்கும் பருப்புக் கலவை,கரைத்து வைத்த புளி இரண்டையும் ஊற்றி மேலும் ஒரு பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான தாழ்ச்சா ரெடி! பிரியாணி கொஞ்சம் சொதப்பினாலும் இந்த தாழ்ச்சாவோடு சேரும்போது பறக்கும்.