வலிப்பு நோயுள்ள பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?
வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.
இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.
தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின் ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.
வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால் வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.