கல்யாண வீட்டு ஸ்டைலில் அவியல் எவ்வாறு செய்வது? வெறும் 5 நிமிடம் போதும்
தென்னிந்தியாவில் பிரபலமான உணவில் ஒன்றாக இருக்கும் அவியல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – 2
முருங்கை காய் – 1
உருளைக் கிழங்கு – 1
அவரைக்காய் – 3
பீன்ஸ் – 3
கேரட் – சிறியது 1
பூசணிக்காய் – 100கிராம்
வாழைக்காய் – அரை மட்டும்
சின்ன வெங்காயம் – 2
தேங்காய் – சிறிதளவு
சீரகம் – 1 ஸ்பூன்
தயிர் – 3 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை
முதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கி பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
இந்த இடைவெளியில் மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் நன்கு வெந்ததும், இதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
சுமார் 5 நிமிடம் வேக வைத்த பின்பு இதில் தயிர் சேர்த்து கிளறி விடவும். இதற்கிடையில் தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவியலில் சேர்த்து கிளறி விடவும்.
இதனுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான அவியல் தயார்.




