சளி இருமலை ஓட ஓட விரட்டும் நாட்டுக்கோழி சூப்… இப்படி செய்து பாருங்க
குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமலை போக்குவதற்கு நாட்டுக்கோழி சூப் எவ்வாறு வைத்து சாப்பிடுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குளிர் மற்றும் பனிக்காலம் வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி இருமல் பிரச்சனையால் அவதிப்படுவார்கள்.
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது இந்த தொந்தரவுகள் அதிகமாகவே இருக்கின்றது. அந்த வகையில் சளி, இருமலுக்கு ஏற்ப நாட்டுக்கோழி சூப் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி – கால் கிலோ
இஞ்சி பூண்டு – 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் – கால் கப்
சிறிய தக்காளி – 1
மஞ்சள் தூள் – சிறிதளவு
சிவப்பு மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை – அரை அங்குலம்
ஏலக்காய் – 1
கிராம்பு – 1
கறிவேப்பிலை – சிறிது
மசாலா அரைப்பதற்கு
கொத்தமல்லி விதை – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 3
தண்ணீர் – சிறிதளவு

செய்முறை
அரைப்பதற்கு கொடுக்கப்பட்டு பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு தாளிப்பதற்கு கொடுத்த பொருட்களை எண்ணெய் காய்ந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கிய பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள் மற்றும் மிளகாய் பொடியினை சேர்த்து வதக்க வேண்டும்.
சுமார் 3 நிமிடம் வதக்கிய பின்பு சிக்கனையும் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கினால் நாட்டுக்கோழி சூப் தயார்.
கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து பருகினால் சளி, இருமலுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.



